பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


69 திருக்கழுக்குன்றத்துத் திருக்கழுக்குன்றமுடைய நாய ர்ை கோயிலில் தொண்டர்கள் நாயன் திருக்காவணத்துத் திருட்டு வழக்கு ஒன்றை விசாரிப்பதற்குக் கூடியவர் களில் ரீருத்ர ரீமாகேசுவரர்கள்’ கூறப் பெறுகின் றனர் (S. 1. 1. Vol. V, 479). இது வீர கம்பண்ண உடையார் கல்லெழுத்து. திருமணஞ்சேரியில் கண்ட மூன்ரும் குலோத்துங்க சோழனுடைய 20 ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்தி ளிைன்று ரீருத்ர ரீமாகேசுவரர் ஒரு தருமத்தை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டனர் என்று (புதுக்கோட்டைச் சாஸனங்கள்-152 இல்) தெரிய வருகிறது. சோணுடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவ ருடைய 3 ஆம் ஆண்டுச் சாஸனத்தினின்று திருக் கொடுங்குன்றமுடைய நாயனுர் கோயிலில் (பிரான் மலேயில்) நீருத்ர ரீமாகேசுவரர்” இருந்தனர் என e%pjusemub (430 of Vol. VIII). வீரகம்பண்ண உடையாரின் (சகரயாண்டு 1297க் குரிய) ஆறகளுர்க் கல்லெழுத்து (431 of 1913) நீருத்ர பூமோகேசுவரர்களும் கோயில்பணியாளரும் கூட்டம் கூடியிருந்து எண்ணுடைய நாயனர் என்பார்க்குக் கோயில் அலுவல் பார்க்க உத்தரவு அளித்தனர் என்று கூறுகிறது. உருத்திரகணத்தார் திருவாமாத்துார்க்கோயிலில் காரியம் பார்ப்பவர்களுக் குரிய ஊதியத்தை, ஊர்ச்சபையினரும், சிவப்பிரா மணரும், உருத்திரகணத்தாரும் சேர்ந்து நிர்ணயித்தனர்