பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


72 பாத சேகர மங்கலம் என்ற ஊர்கள் குறிக்கப் பெற் றுள்ளன.) மேற்குறித்த அரசனது திருநெல்வேலிக் கல்வெட்டு (432 of S. I. I. Vol. V ; 141 of 1894) யூரீருத்ராத் யயனம் செய்வதைக் குறித்து நிபந்தம் விட்ட செய்தி யைக் கூறுகிறது. இவ்வரசனது பிள்ளைகளில் ஒருவர் சுந்தரபாண்டியதேவர் ; இவர் புரட்டாசித் திங்கள் மூல நாளில் பிறந்தவர். அம்மூலநாள் முதற்கொண்டு திரு நெல்வேலியுடையார் திருமுன்பு சிறு காலச் சந்தியிலே நாடோறும் ரீருத்ராத்யயனம் செய்யும் பன்னிருவர்க்குப் போஜன முள்ளிட்டு வேண்டுவனவற்றுக்கு ரீருத்ராத் யயணப்புற இறையிலியாக நிலம் ஒதுக்கப்பெற்றது. இனித் திருபுவனச் சக்கரவர்த்திகள் சோனடுங் கொண்டு முடிகொண்ட சோழபுரத்தில் (பழையாறையில்) வீராபிஷேகம் பண்ணியருளிய ழ்நீசுந்தரபாண்டிய தேவற்குயாண்டு பதினேழாவதின் எதிரா மாண்டின் எதிராமாண்டு கொடுத்த கல்வெட்டில் ரீருத்ராத் யயனம் பற்றிய செய்தி சொல்லப்பட்டுள்ளது (422 of S. . . Vol. V , 433 of 1894). திருநெல்வேலியில் ஆலால சுந்தரர் திருமடத்தில் சே(ய்)ஞலூர் திருவெண் காடுடையான் அனவரதானனை அணுக்கநம்பி என்ற தபஸ்வி ஒருவர் இருந்தார். இவருடைய தந்தை திரு வெண்காடுடையானை அணுக்கநம்பி என்ற பெயருடை யவர் ; அவருக்குத் திருநெல்வேலி (யுடைய நயினர்) கோயிலிலே சிறுகாலச் சந்தியிலே ரீருத்ரம் அத்யய னம் பண்ணுதற்கு இருபத்தஞ்சச்சு அளிக்கப் பெற்றது. இவ்விருபத்தைந்து அச்சையும் பலரிடத்திலே கோதைப் பிராட்டி மங்கலத்தில் நெல் வட்டிக்குக் கொடுத்தார் ;