பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


77 அவ்வம்மையார் ஞான சிவாசாரியார் என்பவருடைய மகள் என்பதும், சைவ கெளதம கோத்திரத்தில் அவ்வம். மையார் பிறந்தார் என்பதும் அறிதற்பாலனவாம். நம்பியாரூரர் ஆளுடைய நம்பி என்றமைபோல, நம்பியாரூரர் என்றும் சுந்தரர் குறிக்கப் பெறுகிருர். இதனை வீரபாண்டிய தேவரது திருநெல்வேலிக் கல்லெழுத்தி னின்றும், இராசராசனது தஞ்சை இராசராசேச்சரத்துக் கல்லெழுத்துக்களினின்றும்" அறிகிருேம். முதலாம் இராசேந்திரனின் 20 ஆம் ஆட்சிக்குரிய திருமழபாடிக் கல்வெட்டு, நம்பியாரூரர்ை படித்தைத் திருப்பள்ளித் தாமப்பிச்சன் எழுந்தருளுவித்து நிலம் அளித்ததாகக் கூறுகிறது. முதல் இராசராசனின் பத்தாம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூகூர்க் கோயிலில் நம்பி யாரூரர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடத்த நிபந்தம் அளித்ததை அறிவிக்கிறது. இராசராசன் திருப்பதியம் ஒத, நியமித்த 48 பிடாரர்களில் இருவர்க்கு ஆரூரர் என்ற பெயரும், இன்னும் இருவர்க்கு நம்பியாரூரர் என்ற பெயரும் அமைந்திருந்தமை அறிகிருேம்." தடுத்தாட்கொண்டருளிய நாயனர் சுந்தரர்க்குத் திருமணம் நிகழவிருக்கையில், சிவ. பெருமான் கயிலையில் அருளிய வண்ணம் தடுத்தாட் 5. S. I. I. Vol V, No. 418; 129 of 1894. 6. S. I. I. Vol. II, Part II No. 38. 7. 37 of 1920. 8. 299 of 1907. 9. S. I. I. Vol. II, Part III, No. 65.