பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


80 செய்” என்ற கல்லெழுத்துப் பகுதி அறிவிக்கிறது. இரண்டாம் குலோத்துங்க சோழனது 7 ஆம் ஆட்சி ஆண்டுக்குரிய திருவாரூர்க் கல்வெட்டு, திருவாரூர்க் கோயிலில் எழுந்தருளுவிக்கப் பெற்ற ஆளுடையநம்பி, பரவைகாச்சியார் படிவங்களுக்கு அநபாய நல்லூர் என்ற ஊர் அளிக்கப் பெற்றதாகக் கூறுகிறது. முதல் இராசேந் திரனது 20 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டினின்று' இராசேந்திரனது அணுக்கியார் பரவை நங்கையார் என்று இப்பரவையார் பெயரைப் பூண்டிருந்தனர் என்று அறிகிருேம். திருத்தொண்டத்தொகை 19 "ஈசன் அடியார் பெருமையினே எல்லாவுயிரும் தொழவெடுத்துத் தேசமுய்யத் திருத்தொண்டத்தொகை” பாடினர் சுந்தரர். இப்பதிகம் பெரிய புராணத்துக்குப் பதிகமாக விளங்குவது. இது மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்று கல்லெழுத்துக்களினின்று அறிகிருேம். திருத்தொண்டத்தொகை நினைவாகத் திருவிடை வாயிலில் திருத்தொண்டத் தொகையான் குகை என்று ஒரு குகை இருந்ததென மூன்றம் இராசேந்திரனுடைய 4ஆம் ஆட்சி ஆண்டு (கி. பி. 1250)க்குரிய கல்லெழுத்துக் கூறுகிறது.?? இக்குகையுள் திருமுறைகள் வைக்கப்பட் டிருந்தன. திருச்சி மாவட்டம் கோவந்தபுத்துாரில் 16. S. I. I. Vol. V, No. 533. 17. S. I. I. Vol. VII, No. 485; 269 of 1901. 18, 680 of 1919. 19. குமரகுருபரன் திங்களிதழ்மலர் ?, இதழ்12, பக்கம் 715-720 காண்க. (என் இலக்கியக்கேணியும் காண்க.) 20, 10 of 1918.