பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


81 மூன்ரும் இராசேந்திர சோழனது 2ஆம் ஆண்டு (கி. பி. 1248)க்குரிய கல்லெழுத்து, திருத்தொண்டத் தொகை யான் திருமடம் என்று ஒரு மடத்தைக் குறித்துச் சில செய்திகளைச் சொல்லுகிறது. சிதம்பரம் நடராசப் பெரு மான் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தை யடுத்துத் "திருத்தொண்டத்தொகை யீச்சரம்' என்ற ஒரு திருக் கோயிலில் தொகையடியார்கள் சிவலிங்கத் திருமேனி வாயி லாக வழிபடப் பெற்றனர் என அறிகிருேம். இவ்வாலயம் நவலிங்கம் கோயில் என இந்நாளில் வழங்குகிறது. இக்கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவுருவமும் அமைக்கப் பெற்று இருந்தது எனக் கல்வெட்டுக்கள் புகல்கின்றன.* மூன்ருங் குலோத்துங்க சோழனது இரண்டாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு இத் திருக் கோயிலைக் குறிக்கிறது. இனிச் சிதம்பரத்திலுள்ள இராசேந்திர சோழனது 24ஆம் ஆட்சியாண்டுக் கல் லெழுத்தொன்று தில்லையில் “திரு மாசித்திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணிப்பஞ் செய் வார்க்குக் காசு ஐஞ்சு' நிபந்தமாக அளித்ததாகப் பகர் கின்றது. சி பொன்ஞர் மேனியன்” . சுந்தரர் திருமழபாடியில் பாடியருளிய திருப்பதிகம் "பொன்னர் மேனியன்' என்ற தொடக்கமுடையது. 21. 192 of 1929. 22. சிதம்பரம்-தருமபுர ஆதீன வெளியீடு-பக்கம் 44. 28. 262 of 1913. 24. S. I. I. Vol. IV, No. 223; 118 of 1888. 25. குமரகுருபரன் திங்களிதழ் மலர் 8, இதழ் 7, பக்கம்418-422 காண்க. (என் இலக்கியக் கரிையம் காண்க) 6