பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


82 பொன்னர் மேனியன் என்ற தொடர் 11 ஆம் நூற் ருண்டில் வாழ்ந்த ஒரு சேனபதியின் மனத்தைக் கவர்ந்தது. அவர் சேளுபதி அரையன் கடக்கங் கொண்ட சோழன் அனிமுரி நாடாழ்வான் எனப் பெற்ருர். அவர் திருமழபாடிக் கோயிலில் செம்பு தராவால் பொன்னர் மேனியன் என்ற திருமேனியை எழுந்தருள்வித்து, அதற்கு நாள்வழிபாட்டிற்கு நிபந்தம் அளித்ததோடு சில அணிகலன்களையும் அளித்ததாக இரண்டாம் இராசேந்திரனுடைய கல்லெழுத்து உரைக் கின்றது. இனி இச்சொற்ருெடர் பொன்னர் மேனி பட்டர் என்று ஒரு பட்டர் பெயரில் அமைந்ததாகச் சுந்தரபாண்டியனது கல்லெழுத்து 2 உரைக்கின்றது. அன்றியும் மூன்றம் குலோத்துங்க சோழரது 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டினின்று’ ஊரின் உட்பகுதி யொன்று பொன்னர் மேனி விளாகம்” என்று பெய ரிடப் பெற்றிருந்ததாகக் கூறப் பெறுகிருேம். கிழிபெற்றது சுந்தரர் திருப்பாச்சிலாச்சிராமத்தில் பொற்கிழி பெற்ருர்; மூன்றம் இராசராசனது 27ஆம் ஆண்டுக் கல்லெழுத்தில், "கிழி கொடுத்தருளிய திருவாசல்: என்று ஒருவாசல் குறிக்கப் பெறுகிறது. உளோம்போகீர் சுந்தார் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து, பின்னர்த் திருவாரூர்க்கு வரப் புறப்பட்டார்; சூள் பொய்த் தமையின் இரு கண்களேயும் இழந்தார்; கண்ணிழந்து 26. S. i. i. Vol. V, No, 644. 27. S. I. I. Vol. V, No. 649. 28. S. I. I. Vol. V, No. 632.