பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


85 அழைத்த அற்புதத்தை நினைவுகூர்தல் பொருட்டேயாம் என்பது ஊகித்தறிதற்பாற்று. ஆளுடையாம்பி ரீபுராணம் இரண்டாம் இராசாதி ராசனுடைய 9 ஆம் ஆட்சி யாண்டுக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்து, 'இவ் வரசன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோ லக்கம் செய்தருளியிருந்து ஆளுடையநம்பி ரீபுராணம் கேட்டருளா நின்ருர் ' என்று கூறுகிறது. மகிழமரத்தின் கீழ் சுந்தரருக்கும் சங்கிலியார்க்கும் திருமணம் நடந்த செய்தி இங்கு நினைவுக்கு வரும். மகிழின் கீழ் படிக்கப் பெற்ற ரீபுராணம் பெரிய புராணமாதல் தகும் என்று ஆராய்ச்சியாளர் கருதுவர். தாராசுரத்துச் சிற்பங்கள் கும்பகோணத்துக்கு அண்மையிலுள்ள தாராசுரத் துக் கோயில் இரண்டாம் இராசராசனுல் கட்டப்பெற்றது. இக்கோயில் இறையகத்துச் சுற்றியுள்ள பகுதியில் நாயன் மார் சரிதங்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. அச் சிற்பங்களின்மேல் அவ்வச் சிற்பத்தை விளக்கும் சொற் ருெடர்கள் காணப்படுகின்றன. சுந்தரருடைய வரலாற் றைக் குறிக்கும் சொற்ருெடர்கள் பின்வருமாறு : 1 உடைய நம்பி எழுந்தருளுகிருர் : 2. ஆவணவோலே காட்டினபடி : == 35. S. L. I. Vol. V. No. 1358; K. A. N. Cholas Part II, P. 481. (ஞானசம்பந்தம், திங்களிதழும் காண்க.) 86. திருக்கோயிலில் வெளிவந்த தாராசுரத்து இராச ராசேச் சுரம்' என்ற என் கட்டுரை காண்க.