பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


89 ஆண்டார்களுக்கு என்றும், திருவான மறுத்தாரைத் தண்டிக்கும் உரிமை நகரத்தார்களுக்கு என்றும் இத் திருமாணிகுழிக் கல்லெழுத்துப் பகர்கின்றது. இனி இவற்றின் வேருக மஹா சபையார் ஆணை என்றென் றுண்டு என்பது மதுராந்தகக் கல்லெழுத்தால் அறிய ՅՆ)TԼՈւ திருவிரையாக்கலி மேலே கண்ட ஆணைகளில் திருவிரையாக்கலி குறித்து 11 ஆம் திருமுறையிலேயும் 12 ஆம் திருமுறையி லேயும் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. 11 ஆம் திருமுறை: பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த பிரபந்தங்களில் ஒன்று கோயில் நான்மணிமாலை. இதில் நான்காவது பாடலில் சிவபெருமானுக்குரிய தசாங் கங்களைக் கூறுகையில் திருவிரையாக்கலி குறிப்பிடப் பட்டுள்ளது. அப் பாடற்பகுதி பின்வருமாறு : தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில் வீர வெள்விடைக் கொடியும் போரில் தழங்குந் தமருகப் பறையும் முழங்கொலித் தெய்வக் கங்கை யாறும் பொய்நீர் விரை யாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் ங் வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் வைதிகப் புரவியும் வான நாடும் மையறு கனக மேருமால் வரையும் செய்வயல், தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென் ருெருபதி யிைரந் திருநெடு நாமமும் உரிமையிற் பாடி.'