பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


91 புலியார் சொல்லிச் சென்றிருப்பினும் பசிக் கொடுமை யால், “ இறைவன் அமுதுபடியைக் கொள்வது பிழைதான் ; எனினும் பின்னர் ஈடுசெய்வோம் ' என்று நினைத்து அந்நெல்லே எடுத்து உண்டனர். சின்னுள் பின்னர்க் கோட்புலியாரும் திரும்பினுர் ; நிகழ்ந்ததைக் கேட்டறிந்தார் ; யாவர்க்கும் ஆடை யணிகலன்களே அளிப்பார்போலே யாவரையும் வரவழைத்தார் ; எல் லோரும் வந்ததும், ' நாதன்றன் வல்லாணை மறுத்து அமுதுபடி அழித்த மறக்கிளேயைக் கொல்லுவேன் ’’ என்று கூறி ஒவ்வொருவரையும் கொன்ருர். இதுவே (12 ஆம் திருமுறை) பெரியபுராணத்தில் வந்த வரலாறு. திருவிரையாக்கலி மறுப்பின் ஆணைகளை மறுப்பின் என்ன தண்டனே என்று கல்வெட்டினின்று தெரியவில்லை. ஆனுல் கோட்புலி நாயனுர் புராணத்தில் திருவிரையாக்கலி மறுத்தல் சிவாபராதம் என்றும் திருவிரையாக்கலி மறுத்தார்க்குரிய தண்டனை, மறுத்தாரைக் கொல்லுதலே என்றும் தெரிய வருகிறது. திருவிரையாக்கலிப் பெருந்தெரு விரையாக்கலி எனும் ஆணையின் பெயரால் ஒரு பெருந் தெரு இருந்ததாகத் திரும்புறம்பயக் கல்வெட்டி ஞல் அறிய வருகிறது. முதலாம் இராசேந்திரனின் 16 ஆவது ஆட்சியாண்டில் திருப்புறம்பயத்தில் சந்தி விளக்கு சிறுகால ஐந்தும், உச்சிப்பொழுது ஐந்தும் வைக்க 50 காசு நெற்குப்பையுடையான் வெண்காடன் என்பான் அளித்தனன். இதைக் கொண்டு நிசதம் உழக்கு எண்ணெய் கொடுப்பதாக அத்தேவர் தேவ