பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


94 நீராடினர் ; மணியாரம் காவிரி நீரில் தவறி வீழ்ந்தது. அரசர், சிவபெருமானே ! இம்மணியாரத்தைக் கொண்ட ருளும்’ என்று வேண்டிஞர். உடனே அம்மணியாரம் திருமஞ்சனக் குடத்துள்ளே புகுந்தது ; திருவானேக்கா எம்பெருமாற்குத் திருமஞ்சனம் ஆட்டியபொழுது அந்த ஆரம் சிவபெருமான் திருக்கழுத்தில் விழுந்து அணி செய்தது. இங்ங்ணம் சிவபெருமான் திருவானேக்காவில் ஆரம்பூண்டவராயினர். இவ்வற்புதத்தைச் சம்பந்தர், - பாரும் விண்ணும் கைதொழப் பாயுங் கங்கை செஞ்சடை ஆர நீரோ டேந்தின்ை ஆனேக் காவு சேர்மினே' என்று குறித்துள்ளார். சுந்தரர் இதனைச் சிறிது விரி வாகவே பின்வருமாறு பாடியுள்ளார் : தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும் நீரில் நின்றடி போற்றி நின்மல கொள் என ஆங்கே ஆரம் கொண்டஎம் ஆனேக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. இங்ங்னம் ஆரம்கொண்டமையின் இ த் த ல த் து ச் சுவாமிக்கு ஆரங்கொண்ட பெருமான்’ என்ற பெயர் வழங்கலாயிற்று என்றறிகிருேம். ஆரம்பூண்டான் என்ற பெயரைத் திருவானைக் காவில் இடைக்காலத்துத் தமிழ்ப் பெருமக்கள் இயற் பெயராகவோ சிறப்புப் பெயராகவோ தரித்திருந்தனர். "ஆரம்பூண்டான்' என்பது மேலே சம்பந்தரும் சுந்தரரும் குறித்த அற்புதச்செயலேயே நினைப்பூட்டுகிறது; ஆகலின் இவ்வரலாற்றைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்தது எனக் கோடல் பொருந்தும். திருவானைக்காவில் காணப் பெறும் கல்லெழுத்துக்களில் மூன்றனுள் இப்பெயர் காணப்பொறுகிறது.