பக்கம்:கல்விச் செல்வம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

உழைப்பாளி மக்களும் பாட்டாளித் தோழர்களும், தொழிலாளர்களும் பள்ளிக் கூடங்களிலும், தொழில் நுட்பக் கல்வி நிலையங்களிலும் கல்லூரிகளும் தத்தம் கல்வி உரிமையைப் பெற்றனர்.


எல்லாருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய புரட்சியாகும், அமைதியாக நடைபெறும் புரட்சி.


கல்வி இருவகைப்படும், ஒன்று தொழிற் கல்வி-மற்றொன்று மொழிக் கல்வி.


இவ்விரண்டுக் கல்வியும் எண்ணொடும் எழுத்தொடும் தொடர்புடையவை.


அறிவியல் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும் சரி, அறிவியல் அவ்வளவாக வளராத இயற்கையோடொன்றிய பண்டையக் காலத்திலும் சரி, கல்விபற்றி தமிழறிஞர்களும் மக்களும் எண்ண எண்ணினர், எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்தனர் என்று முற்போக்கிலும் நற்போக்கிலும் செல்லும் நாம் ஒரு பின்னோட்டம் விட்டுப்பார்ப்பதே இந் நூலின் நோக்கம்.


நமக்குரிய ஏந்துகளைவிட, வாய்ப்புகளை விடக் குறைவாக இருந்த காலத்தில் கல்வியும் வாழ்வும் ஒன்றுபட வேண்டும் என்று திட்டமிட்ட பழங்காலப் புலவர்களின் எண்ணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.