பக்கம்:கல்விச் செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

19


நீண்டநாள் கற்ப தினும்நீள் அறிஞரொடும்
மாண்புரையால் எய்தும் மதி.

ஒருலகாய் மன்பதை வாழ இளைஞர்க்கும்
சீர் கல்வி சேர்த்தல் சிறப்பு.

காந்திமொழிக்குறள்

கதிரொளிபோல் கால மழைபோல் பொதுவாய்
உரிய தெவர்க்கும் கல்வி.

எழுத்தறி வென்பதே கல்வியின் உண்மைக்
கருத்தாம் கருவி அது.

நன்னடத்தை தன்னை நமில்வளர்ப்ப தொன்றே
முதற்கடமை கல்வி தனக்கு.

பிறமொழி ஊடே நாம் கல்வி பெறுதல்
உறவிலா அல்லல் உளது.

பிறமொழி மூலம் பெறப்படும் கல்வி
துறப்பிலாத் துன்பம் தரும்.

மெய்யறிவைப் பேணா மிகைநூல் அறிவனைத்தும்
மெய்யெனல் பாழ்படுத் தல்.

ஆண்பெண் இருவர்க் களிக்கும்நல் கல்வியில்
பேணுக வேற்றுமைப் பீடு.

கல்வியே தன்னுரிமை நாட்டின் திறவுகோல்,
கல்விஇலை யேல்உரிமை இல்

நெறியான கல்வி முறையின்றேல் இல்லை சிறப்பிக்கும் செய்தொழிற்கல் வி.

கல்வி என நாடும் கல்வித் துறைகளில்
மல்கி யுள்ளது இன்னல் மதி

சிற்றுார் எழில் காட்சி காணாச் சிறப்பாகிக்
கற்பிக்கும் கல்வி அவம்,