பக்கம்:கல்விச் செல்வம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வண்ணக்களஞ்சியம்


கைத்தொழில் இல்லாத கல்வியும் கல்வியா?
பைத்தியம் ஆண்பெண் பிழைப்பு.

ஐம்பொறிக்கும் ஆன்ற பயிற்சி கொடுப்பதே
செம்மை அறிவுத் திறன்.

அகத்தும் புறத்தும் ஆன்ற பயிற்சி கொடுப்பதே
செம்மை அறிவுத் திறன்.

பிள்ளைகளைத் தண்டிக்கா வண்ணம் தரும்கல்வி
கொள்வதே ஆசிரியர் கோள்.

உடற்பயிற்சி, ஒவியம், கைத்தொழில் பாட்டோடு
இடம்கொளல் கல்விக் கழகு.

தாய்மொழியின் ஊடே தரும்கல்வியே கல்வி,
பேய்மொழியாம் பற்பல நூல்.

புத்தகக் கல்வியால் புத்துணர்வைப் புத்தறிவைப்
புத்தெழுச்சி கொண்டடைதல் பொய்.

நல்லபல செய்திகளை நாற்றிசையில் உண்டுவப்போன்; கல்வியைக் கற்பான் எளிது.

வீடுகளில் தயார் வழியில் விழுமிய
ஏடறியாக் கல்வி எழும்.

பிறரினும் தாயே குழந்தைக்குக் கல்வி
திறம்பட ஊட்ட முடியும்.

இலக்கியக் கல்வியில் மாந்தன் இயல்பு ஓர்
அலகும் உயர்வ திலை.

கல்வி கருவியே அன்றி குறிக்கோளிலை
நல்ல, ஒழுக்கமே கல் வி.

அளவுக்கு மீறிய கல்வியால் மூளை
தளர்ந்தழுவிப் போயிற்றே தாழ்ந்து

கல்வி உலகுரிமை, ஆதலால் கல்வியை
எல்லார்க்கும் செய்க பொது.