பக்கம்:கல்விச் செல்வம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

21


பண்பு மேம்பாடே பயனளிக்கும்; மாந்தர்க்குக்
கொண்டூட்டும் கல்விப் பணி.

ஒழுக்கம், வலிமை, துணிவை உயர்த்தும்
விழுப்பமே கல்வி விருந்து.

உடல் உழைப்போடு ஒன்றும் உணர்வுஆர்ந்த கல்வி
திடப்படுத்தும் நுண்ணறிவைத் தேர்ந்து

எழுத்தறியும் கல்வி இளமையில் ஆண், பெண்
வழித்துணை வீணுக் கிலை

எழுத்தறிவோடு ஆன்ற தொழிலினும் இணைத்தல்
முழுக்கல்வி ஆகும் முனை.

எங்கே ஒழுக்கம் இடறுமோ அங்கேநல்
கல்வி மணம்கமழ்தல் இல்,

கல்வி முறைக்கும்.நம் வாழ்க்கை முறைக்கும்ஒரு
புல்லும் முறைஒன்றி லை.

வாழ்க்கையின் எல்லாத் துறைக்கும் பொறுத்தமுறும் ஆழ்உணர்வைத் தூண்டலேகல் வி

ஒவ்வொரு வீடும் கலைப்பள்ளி, ஆசிரியர்
செவ்விய பெற்றோர்க ளே!

எளிய சிறிய நலனையும் ஈயாத
கல்விஒரு கல்விஆ கா.

நம்மில் உறங்கும் அறிவை வெளிக்கொணரும்
நெம்புகோள் ஆசிரியர் கள்.

ஆங்கிலக் கல்வி முறையால் அடிமையாம்
தீங்குற்றோம் ஆண்மைஇழந் தோம்.

ஆங்கிலம் வைய மொழி எனினும் ஆகாதே
பாங்குறும் தாய் மொழிபோல் பாங்கு.

தன்னைத் தான் மேம்படச் செய்வதே சால்புடை
நன்னயக் கல்விப் பயன்.