பக்கம்:கல்விச் செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வண்ணக்களஞ்சியம்


அக்கறை இன்றி இலக்கியம் கற்பதினும்
சிக்கல் மொழிப் பிழையைத் தீர்

கல்வி அறிவோடு உடல் ஓம்பல் கொள்வதே
நல்ல பயிற்சி முறை.

படிப்பறிவு பாழ்ப்படின் மக்கட்கும் தம்மைப்
படித்தறிதல் இல்லாமற் போம்.

இயற்கை அறிவை இனிதாக்கிக் கூர்மை
மயமாக்கல் கல்விப் பணி.

ஏழைக்கு இடமில்லா இன்கல்வி மாளிகைகள்
வாழினும் வீழினும் என்?

நாம் பெறும் கல்வி நமதுவாழ் வோடு ஒத்தது
ஆமாயின் மேன்மை அது.

பள்ளிக்கும் பல்கலை மன்றுக்கும் சென்றால் தான்
கல்வி வளருமெனல் தப்பு.

பள்ளியில் பிள்ளைகள் அச்சம் அகற்றுவதே
கொள்ளும் முதற்கண் படிப்பு.

உடலுழைப்பின் மூலமே பிள்ளைகட்குக் கல்வி
எடுபடும்வே றில்லை வழி.

புத்தகங்கள் மூலமே புத்தறிவைக் கொள்ளல் எனல்
முற்றிலும் மூடத் தனம்,

ஒழுங்குடன் ஒங்கும் குடும்பத்துப் பிள்ளை
தொழும் கல்வி தூக்கும் சிறந்து.

தாய் மொழிக்கு உண்மைத் தலைமை தராத்திட்டத்
தேய்வுறும் கல்வித்திட் டம்.

மாணவரின் ஊடேயும் மற்றைப் பொழுதினும்
மாண்பு ஒழுக்கம் ஆசிரியர் மாண்பு.

மாணவன் என்னல் புலன் அழுக்கு அற்றசீர்
ஆனவன் என்னும் அறம்.