பக்கம்:கல்விச் செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

23


பாவேந்தர் ஆத்திசூடி

ஓவியம் பயில்
கல்லார் நலிவர்
கேட்டு விடையிறு
நுண்ணிதின் நுண்மை தேர்
முகச்சரக்காய் வாழ்.

பாரதி புதிய ஆத்திசூடி

கற்றது ஒழுகு
நீதி நூல் பயில்
நூலினைப் பகுத்துணர்
மீளுமாறு உணர்ந்துகொள்
உலோக நூல் கற்றுணர்
வான நூற் பயிற்சி கொள்
வேதம் புதுமை செய்

ஆத்திசூடி

எண்ணெழுத் திகழேல்.
இளமையிற்கல்
கேள்வி முயல்
நூல்பல கல்.
வித்தை விரும்பு

கொன்றை வேந்தன்

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
நிற்கக் கற்றல் சொற்றிறம்பாமை