பக்கம்:கல்விச் செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

வண்ணக்களஞ்சியம்


உலக நீதி.

ஓதாமல் ஒருநாளுமிருக்க வேண்டா

வெற்றி வேற்கை

கல்விக்கழகு கசடற மொழிதல்

கற்கை நன்றே. கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே

நன்னெறி

எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்
எழுத்தறிவார்க் காணினிலையாம்- எழுத்தறிவார் அயூங்கடவுளவிர் சடைமுன் கண்டளவில்
விஞ்சுரநீர் மிசை

பாவேந்தர் வெண்பா

சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு
துட்டுக்கும் கண்ணயர்ந்து தூங்குதற்கும் கட்டத்
துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல
பணக்காரன் ஆக்கும் படிப்பு.

படிச்சையிலே தொல்லை இருக்கும்; படித்து
முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி. முடித்தபின்
தொட்டதெல்லாம் வெற்றி, துயரின்றி வாழலாம்
கட்டாயம் கல்வி பயில்.

கல்லாத மூடனை ‘வா’ என்பார், கற்றவனை
எல்லாரும் வாருங்கள் என்றழைப்பர்; செல்வம்
படிப்பானைச் சேரும்; படியான் கூழ்ப் பானை.
அடிப்பானை யும்வெறும்பா னை.