பக்கம்:கல்விச் செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

29


திரிகடுகம்

ற்றாரைக் கைவிட்டு வாழ்வதும், காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்உலகம் சேரா தவர்.

ஏலாதி



டைவணப்பும், தோள்வனப்பும், சடின்வனப்பும் நடைவனப்பும், நாணின். வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.

அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறாய நீக்கி - மறுவரவில்
மாசாரியனாய் மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியனது அமைவு.

எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தால்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்:-மொழித்

திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்

அறநெறிச்சாரம்

தேசும் திறனறிந்த திட்பமும், தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை- ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி!

எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.