பக்கம்:கல்விச் செல்வம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வண்ணக்களஞ்சியம்



மறவுரையும் காமத்து உரையும் மயங்கிப்
பிறவுரையும் மல்கிய ஞாலத்து- அறவுரையைக்
கேட்டும் திருவுடை யாரே, பிறவியை
மீட்கும் திருவுடை யார்.

இருளே உலகத்து இயற்கை, இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை.

திருமந்திரம்

துணையது வாய்வரும் தூயநல் கல்வியே

உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி.

கற்றறி வாளர் கருதிய காலத்து
கற்றறிவாளர் கருத்தில்ஓர் கண்உண்டு
கற்றறிவாளர் கருதி உரைசெயும்
கற்றவி காட்டக் கனலுள வாக்குமே.

கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்;
கல்லா அரசில் காலன் மிகநல்லன்:
கல்லா அரசன் அறம்ஒரான்: கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது;
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்;
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

தொல்காப்பியம்

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வருடம்
ஏது நுதலிய முதுமொழி.