பக்கம்:கல்விச் செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

31


இளம்பூரணம்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையார் தம்மொடும் பயிறல்
வினாதல், வினயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்.

நன்னூல்

உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின்
கனக்கோட்டம் தீர்ச்கும் நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும் நூல்.

களி, மடி, மானி, காமி, கள்வன்
பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னுாற்கு அஞ்சித்
தடுமாறு உளத்தன், தறுகணன், பாவி
படிறன், இன்னோர்க்குப் பகரார் நூலே.

கோடல் மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி, அவன் குறிப்பில் சார்ந்து
இருவன இருந்து சொல்எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களன்ஆகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்துஅமைத்துப்
போஎனப் போதல் என்மனார் புலவர்.

இலக்கணக்கூற்று

சில நாள் பழகின் சிலவும் பலியா,
பலநாள் பழகின் பவிக்கும் என்க: