பக்கம்:கல்விச் செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வண்ணக்களஞ்சியம்


விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கருகாது என்க;
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக.
நூலினை மீளவும் நோக்க வேண்டா ---

சூத்திரம் பலகால் பார்க்கவே துணிக,
மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டு
கூரியன் உடனே கொடுத்தும் பழகுக
சொல் பயில் விப்பவன் எப்படிச் சொற்றானான்
அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக.

புறநானூறு

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே,
பிறப்புஓர் அனைய உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்,
ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே;

நச்சினார்க்கினியம்

ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே.
முக்கால் கேட்பின் முறை அறிந்துரைக்கும்
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூறு அல்லது பற்றலன் ஆகும்.