பக்கம்:கல்விச் செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வண்ணக்களஞ்சியம்


சீவகசிந்தாமணி

கைப்பொருள் கொடுத்துக் கற்க
கற்றபின் கண்ணு மாகும்,
மெய்ப்பொருள் விளக்கு நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையு மாகும்,
பொய்ப் பொருள் பிறகள் பொன்னாம்
புகழுமாந் துணைவி யாக்கும்
இப்பொருள் எய்தி நின்றீர்
இரங்குவ தென்ன என்றான்.

இழுதன்ன வெண்ணினத்த செந்தடிக்கே
ஏட்டைப்பட்டு இருப்பில் போர்த்தப்
பழுதெண்ணும் வன்மனத்தார் ஒட்டைமரச்
செவியர் கேளார்; பால் போன்று
ஒழுகி அமுதுாறும் நல்லறத்தை
ஓர்கிலர் ஊன்செய் கோட்டக்குக்
கழுகுண்ண வள்ளூர மேசுமந்து
புள்ளிற்கே புறம்செய்கின்றார்.

பெருங்கதை

கற்ற மாந்தரைக் கண்எனக் கோட...

நூற்படு புலவன் சொன்ன
நுண்பொருள் நுழைந்து...

நுண்ணுனர்மன்னன் தன்ஒப் பாகிய
கண்ணுளர் துட்பத்துக் கருத்து நோக்கி
நூற்கண் நுனித்த நுண்ணுணர்வு எண்ணத்தின்
யூகிதன் வயின் ... ... .