பக்கம்:கல்விச் செல்வம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வண்ணக்களஞ்சியம்


வறுமையில் மடமை தன்னால் வருந்தினர் கழியும் காலை
இறுதிசெய் துணையாம் கற்ற உணர்வினை வளர்க்கு
மென்றும்
இறுதிஇல் லாத இன்பம் ஈட்டும் ஆதலினற் கற்று
மறுமவறு ஒழுக்க முள்ளார் வாய்மொழி கேட்டல்
வேண்டும்.

இழிந்தவன் உயர்ந்த தொன்றை இயம்பினும் உயர்ந்தோன்
வாயின்
இழிந்ததொன் றுறினும் உள்ள இயல்பறிந்தோம்பி நீக்கிப்
பொழிந்தெனப் பிறர்தாம்கூறும் புலப்படாப் பொருளும்
ஒள்ளி
வழிந்தெனத் தெளியக் கேட்போர் மனம்கொளப் புகறல்
வேண்டும்.

திருக்குற்றாலப் புராணம்

இருவிழிகள் வான்முகத்தில் இருந்தாலும்
வானிரவி எழுந்தால் அன்றிக்
கருதுநிலப் பல்பொருளும் காண்டல்அரி
தாம்உலகில் கண்போல் யாரும்
பெருகிய செல்வமும் அறிவும் பெற்றாலும்
நூற்கேள்வி பெறுவார்க் கன்றித்
திருவளர்புண் எறிய பாவம் இம்மை மறு
மையும் வீடும்தெரியா வன்றே.

கூர்மபுராணம்

நூல்பல கற்றோ னேனும் பொருள் நுனிந்து
அறியான் எனினும்
மாலொடும் வாளா கத்து மாநிறக் காகம்போல் வான்
ஏல்வுறக் கற்ற நூலின் பொருள்தெரிந் திருநூல் சொன்ன
சீலமே ஒழுகு கின்றோன் சிவனடி நீழல் சேர்வான்.