பக்கம்:கல்விச் செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

37


பொருவி லாவிதி காச புராணங்கள்
தெருலு மாந்தர் சிறப்புள ராகுவர்
தரும நூலும் புராணத்தின் தன்மையும்
கருதி ஓர்ந்தவரே கலை வல்லரே!

தண்டி மேற்கோள்

மனைக்கு விளக்கம் மடவார்;:மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர்- மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஒதின் புகழ்சால் உணர்வு.

உபதேசகாண்டம்

கற்றி லாய்கலை கற்றுண ரார்முகம்
உற்று நோக்கின் மயானத்தை ஒக்குமால்
பெற்று ளார்பெறும் பேறுதம் காதலர்
சொற்ற கல்வியில் தூயர்என் றோதலே.

தாயுமானார்.

கற்றதும் கேட்டதும் தானே எதுக்காகக்
கபடம் என்றுருட்டுதற்கோ நல்லால் எம்மான்
குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ! -


கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லார்கள்
கற்றும் அறிவில்லாத என்
கன்மத்தை என்சொல்கேன் மதியை என் சொல்லுகேன்.


கற்றதும் கேட்டதுந் தானே எதுக் காகக்
குற்றம் குறைந்து குணமேலிடும் அன்பர் கூட்டத்தையே
முற்றும் துணையென நம்புகண்டாய் சுத்த மூடநெஞ்சே!
கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி
பெற்றாலும் இன்பம் உண்டோ? பேசாய் பராபரமே!