பக்கம்:கல்விச் செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வண்ணக்களஞ்சியம்


செல்வம் குல முதலாம் சீரெல்லாம் சேர்ந்துகெடும்
கல்வியொன் றின்றேல் கடையனாய்-நல்ல
விழியிரண்டும் இல்லாத மெய்யேபோல் வெய்ய
பழியே மிகுந்து படும்.

மனித உருவை மருவினும் கல்வி
இனிதமையா தாயின் இழிவே மனிதன்தான்
தெய்வம் எனவே சிறப்பருளும் கல்விதனை
எய்தார் இறந்தார் இழிந்து.

உடலுக் குணவுபோல் ஒண்மதிக்குக் கல்வி
அடலுள் அருளும் அதனால்-படமகன்று
தேசுடைய ராகிச் சிறந்த திறல்மிகுந்து
ஓசையுடன் நிற்பர் உயர்ந்து.

மூடன் எனுமொழியை மூடருமே கேட்கமனம்
கூடாதழன்று கொதிக்கின்றார்-பீடுபெறக்
கற்றவ்ழி விவைக் களையா தயர்ந்து நின்று
மற்றவரை நோதல் மடம்.

செல்வன் என ஒருவன் சேரவரின் ஆயிரம்பேர்
அல்லல் வறுமை அடையவரும்-கல்விமான்
என்ன ஒருவன் எழினோ அறிவுபலர்
துன்ன வருவர் தொடர்ந்து.

தாய்போல் இனிதோம்பும் தந்தைபோல் நன் காற்றும்
தூய மனைபோல் சுக மருளும்-ஆயநலம்
எல்லாம் அருளி இதமளிக்கும் கல்வியிது
வல்லார்க் கெவைதாம் வரா.

பூவேந்தர் எல்லாரும் போற்றிப் புகழ்ந்தேந்தும்
பாவேந்தர் என்னும் பதமுடையார்-நாவேந்தித்
தந்த அறிவுணவே தாரணியில் யாவருக்கும்
அந்தண் அமிர்தம் அறி.