பக்கம்:கல்விச் செல்வம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்


வீட்டு வளர்ச்சிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும்
ஊட்டம் கல்வி உயிர்ப்பு.

கல்வித் திறன்இன்றேல் முன்னேற்றம் காணலிலை
நல்விச்சை நாளும் பயில்.

நாட்டின் அரசியல் நாட்டின் பொருளியல்மேம்
பாட்டில் செயும்கல்விப் பண்பு.

அறியாமை தீர்தொறும் தீர் தொறும் கல்விக்
குறிக்கோண்மை வாழ்வுயர்த் தும்.

இன்பமும் நன்மையும் எய்திட வாழ்க்கையில்
அன்பையும் உண்மையும் சேர்ந்திடும் கல்வியை
என்றும்நீ ஏற்க முனைந்து.

சமையத்தைச் சார்ந்தபாழ்ங் கல்வி, நமைஎன்றும்
மீட்காது மாட்டும் துயர்.

பொதுவுடமை நாட்டின் புதுவாயில் காண
திறவுகோல் கல்வி எழுச் சி.

உலகின்பம் காண உலகை உயர்த்த
நலன்எங்கே கல்வியில் தான்.

கல்வியின்றி இல்லை அறிவு, பொதுவுடமை
நல்குமே மாந்தர் நலம்.

பொதுவுடைமை ஒன்றே அறிவுடைமை கல்வி
புதுவுடைமை யாகப் பெறின்.

நடைமுறை வாழ்விற்குக் கல்வியே நல்பொது,
வுடைமை வழங்கும் உயிர்.

புத்துணர்வு புத்தெழுச்சி கல்விப் புரட்சியில்
ஒத்தெழுந்தால் ஓங்கும் உலகு.