பக்கம்:கல்விச் செல்வம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் நெஞ்சில் கல்வி

வாழ்க்கையின் வனப்பைப் போதிப்தே, உண்மையின் இணைப்பைத் தெரிவிப்பதே கல்வியின் நோக்கம்.


ஒரே மாதிரியான போதனை முறையைக் கடைப் பிடிப்பதைவிடப் பண்பாட்டின் உயிர்ப்பாகக் கல்விமுறை உருக் கொள்வதே இன்றியமையாத் தேவை.


மனத்திற்கு உரிமையும் விடுதலையும் தருவதே கல்வி.

-இரவீந்திரநாத்தாகூர்


கல்வியின் நோக்கம் அறிவு தேடுவது ஆகும்.


எல்லாக் கல்வியின் நோக்கமும் மனிதனை உருவாக்கவே இருக்க வேண்டும்.

-விவேகாநந்தர்


உழவனின் மகன் கல்வி கற்று அறிவைத் தேடி அரசில் அமைச்சனாக முடியும். ஆனால் உயர் குடியில் பிறந்தவனிடம் கல்வி இல்லாவிட்டால் மோசடிகள் செய்வான், அதுவும் முடியாவிட்டால் பிச்சை எடுப்பான்.


ஓர் அரசன் தன் மகன் கழுத்தில் ஒரு வெள்ளித் தகட்டைக் கட்டித் தொங்க விட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்பினான். அந்தத் தகட்டில் எழுதிய மொழியிது: ஆசிரியன் மாணவனிடம் காட்டும் கண்டிப்பைவிட தந்தை மகனுக்குக் கொடுக்கும் சலுகைகள் தாம் பின்னர் துன்பமான முடிவுக்கு இட்டுச் செல்லும்.

-சா ஆதி.


நாம் அறிவாளியாகவும், தேவதையாகவும் வளர்வது தான் கல்வியின் பயனாகும்.