பக்கம்:கல்விச் செல்வம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வண்ணக்களஞ்சியம்


மாணவர்களே பிற்கால ஆசிரியர்கள்.

கல்யாணத்தால் கல்வி போம், மனைவி வீட்டுக்கு வந்த, பின் எல்லாம் போம்.

-இந்தியா.

முதல் பட்டத்திற்கு படிப்பதுதான் கடினம், அடுத்த பட்டம் தானாக வரும்.

-சீனா.

படிப்பில்லாதவர்கள் உடைகள் அணிந்த கால்நடைகள்.

கவிழ்ந்துள்ள கிண்ணத்துள் கதிரொளி பிரகாசிக்காது.

அறிவுக்கதிர்களை அறுவடை செய்ய கண்ணீர் மழை அவசியமாகும்.

- சீனா

சர்க்கரையின் தந்தை கரும்பு ஆலை.

(இது கல்விக்காகச் சொல்லப்பெறுவது. கரும்பை ஆலையில் பிழிவது போன்றது கல்வி கற்றல்)

-கீழ்நாடுகள்

வளைந்த கழியை நெருப்பினில் வாட்டினால், நெகிழ்ந்து விடும்.

-ஆப்பிரிக்கா

ஒரு பையனுக்கு கல்வி கற்பிப்பவன் மூன்று பேர்களுக்கு கற்பிக்கிறான்; ஓர் இளைஞன், மனிதன் வயதானவன்,

இளைஞர்களையும் முயல்களையும் செவிகளைப் பிடித்துத் தூக்க வேண்டும்.

-ஜர்மனி