பக்கம்:கல்விச் செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

55


எழுதப் படிக்கத் தெரிந்தவர்க்கு நான்கு கண்கள் உண்டு.

-அல்பேனியா

சாகும் வரை நாம் கற்றுக் கொண்டிருக்கிரறோம்.

ரொட்டி இல்லாத போதுதான் மனிதன் படிக்கத் தொடங்கினான்.

-உருசியா

செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்துவிடும். கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும்.

-ஆப்பிரிக்கா

கற்றவனுக்கு ஊரெலாம் சுற்றம்.

-தமிழ்நாடு

கல்வி எல்லாம் தரும். 

கல்லாடம் கற்றவனிடம் சொல்லாடாதே. ’’

கல்வி இல்லாதவன் கண்இல்லாதவன். ’’

படித்தவனுக்கு இரவிலும் கண் தெரியும்.’’

படிக்காத முண்டம் ஊருக்குத்தண்டம்.’’

கூழ்ப்பானைக்குத் தெரியுமா வாழவைக்கிற கல்வி.’’

கல்வி யிருந்தால் செல்வம் தானே வரும்.’’

பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது.’’

சின்னவன் படிச்சால் பெரியவனாவான்.’’