பக்கம்:கல்விச் செல்வம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மு ன் னோ ட் ட ம் !

இன்னருங்கனிச் சோலைகள் வைத்தல்
இனியநீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

என்று பாரதி ஆயிரம் அறங்கள் செய்து வந்த நாட்டிலே, தான் மக்கள் எழுத்தறிவுக்கல்வி இல்லாமையை எண்ணி வருந்தினான்.

அண்ணல் காந்தியடிகளும் ஏழைக்குதவாத கல்வி கல்வியே அன்று; கல்வி குடி புகவேண்டிய முதலிடம் ஏழைகளின் குடிசைகளில் தான் என்று வலியுறுத்தினார்.

பயிருக்கு நீர் எவ்வளவு இன்றியமையாத் தேவையோ அப்படியே மனித உயிருக்குக் கல்வியும் தேவை என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் நேரு.

இந்தியாவில் பலருக்கும் கிட்டாது செல்வர்க்கே கிட்டும் ஓர் அரும்பொருளாக கல்வி இருந்து வந்தது. இன்னும் சொல்லப்