பக்கம்:கல்வி உளவியல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைத்தனன் சிற்பி,மற் ருென்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென் துயர்த்தின்ை ; உலகிளுேர் தாய்நீ யாங்கனே எவரை எங்ஙனம் சமைத்தற் கெண்ணமோ அங்ங்ணம் சமைப்பாய் : ஈங்குனச் சரனென் றெய்தினேன்; என்னை இருங்கலைப் புலவனுக் குதியே. -பாரதியார். ஒரு நாட்டில் வாழும் மக்களது அறிவின் திறத்தை இனிது புலப் படுத்துவது அவர்களால் போற்றி வளர்க்கப்பெறும் தாய்மொழியாகும். தாய்மொழி வாயிலாக அறிவின் ஒட்பமும் அதன் பயணுக வினைத்திட்ப மும் நற்பொருளாக்கமும் வளர்ந்து சிறப்பதைப்போல் அயல்மொழி வாயிலாக வளர்ந்து சிறத்தல் அரிது. குறைந்த காலத்தில் அதிக முயற்சியின்றித் தாய்மொழியில் பிறதுறைக் கருத்துக்களை எளிதில் அறிவதைப்போல் அயல்மொழி வாயிலாக அறிதல் அருமை. தமிழ் மொழியோ உலகியல் வழக்கும் இலக்கியப் பழமையும் இலக்கண வரம்பும் கொண்டு வீறுபெற்று வழங்கும் ஒப்புயர்வற்ற ஓர் உயரிய மொழி. இன்று மேற்புலநாடுகளில் பெருமையுடன் திகழும் அறிவியற் கலைகளும் ஏனைய கலைகளும் தமிழில் தோன்றிவிட்டால் இந்திய மொழி களில் தமிழ்மொழியே தலை சிறந்து நிற்கும் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. இதனை கன்குணர்ந்த கவிஞர் பாரதியார், 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் ; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் என்று கூறியுள்ளதைத் தமிழ்மொழியின் ஆக்கம் கருதுவோர் கினைவில் இருத்தி அதன்படி செயற்படத் துணிதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/10&oldid=777695" இலிருந்து மீள்விக்கப்பட்டது