பக்கம்:கல்வி உளவியல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கல்வி உளவியல் வேறுபட்டுத் தோன்றுகின்றன. முதலில் கையசைவும், நாளடைவில் விரல் அசைவு நுட்பங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன. (6) வளர்ச்சியின் பல்வேறு கூறுகள் பல்வேறு வீதங்களில் துலங்கு கின்றன. வளர்ச்சியின் பல்வேறு கூறுகள் ஒரே வேகத்திலும் ஒரே சமயத்திலும் நடைபெறுவதில்லை. (எ-டு.) தொடக்க ஆண்டுகளில் நரம்பு மண்டலம் வேகமாகத் துலக்கமுறுகின்றது. முதல் ஐந்து ஆண்டுகளில் குழந்தைகள் புதியவற்றைக் கற்றுக் கொள்வதுபோல் அவற்றின் வாழ் நாளில் எந்தப் பருவத்திலும் கற்றுக் கொள்வதில்லை. பூப்பெய்தும் பருவத் தில் அவர்கள் பிறப்புறுப்பு மண்டலம் மிக விரைவாக வளர்ச்சிபெறு கின்றது. (7) வளர்ச்சி வீதமும், வளர்ச்சிக் கோலமும் உடலுக்கு உள்ளும் புறம்பும் உள்ள நிலைமைகளைப் பொறுத்தவை: குழந்தைகளின் வளர்ச் சிக்கு அடிப்படைத் தேவையாகவுள்ள சூழ்நிலை அமையாவிடில் வளர்ச்சி விதமும் வளர்ச்சிக் கோலமும் பாதிக்கப் பெறும். உணவூட்டம், செயல், ஒய்வு, நல்ல மனநிலை, தேவையான ஒழுங்கு கிலே முதலிய கூறுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இவை நன்னிலையி லமைந்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும். (8) ஒவ்வொரு குழந்தையும் தனக்கே உரிய சிறப்பான முறை பில் வளர்கின்றது : சில குழந்தைகள் உயரமாகவும் சில குட்டையாக வும், சில ஒல்லியாகவும், சில தடித்தும் இருக்கின்றன. ஒவ்வொருவரு டைய வளர்ச்சியும் ஒவ்வொருவிதமாகவே இருக்கும். இதல்ை பெற்ருேர் கள் குழந்தை வளர்ச்சியினைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வித முயற்சி யும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. குழந்தைக்குக் குழந்தை வளர்ச்சி வேறுபாடுகள் இருக்கும் என்பதை அவர் க ள் அறிதல் வேண்டும். (9) வளர்ச்சி இயக்கங்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது: சிறுசிறு பகுதிகளின் வேலைகள் ஒருமைப்பாடு" பெற்றுப் புதிய செய லாக அமைகின்றன. பெரும்பாலும் நம்முடைய திறனுள்ள செயல்கள் யாவும் முன்னரே அமைந்த துலக்கங்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதிய வைகள் சிலவற்றுடன் சேர்ந்து திரும்பவும் புதிய கோலங்களாக அமை பவையே. - (10) வளர்ச்சி சிக்கலானது; அதன் எல்லாக் கூறுகளும் நெருங்கிய தொடர்புடையவை: குழந்தையின் உடல்வளர்ச்சி அறிவு 29 90solossum G - integration.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/103&oldid=777704" இலிருந்து மீள்விக்கப்பட்டது