பக்கம்:கல்வி உளவியல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 83 வளர்ச்சியோடும், உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சியோடும், சமூக வளர்ச்சியோ டும் தொடர்புடையது. உள்ளக் கிளர்ச்சிகளில் நேரிடும் அமைதிக் கலேவு உண்பதில், அல்லது தூங்குவதில் குழந்தையின் கடத்தை யைத் தீர்மானித்தல் கூடும். குழந்தையின் உறுப்புக்குறை சில மனப் போக்குக்களை உண்டாக்கவும், சமூகப் பொருத்தப்பாட்டை ஏற்படுத்த வும் தொடக்க கிலையாக இருத்தல் கூடும். இத் தொடர்புகளைச் சரியாகப் புரிந்துகொண்டால், குழந்தையின் வளர்ச்சியில் நாம் எதனை எதிர் பார்க்கலாம் என்பதை அறியலாம். இதல்ை பின்னர் நிகழும் வளர்ச்சி முறைகளை முன்னரே அறிந்து, அதற்கேற்பப் பொருத்தப்பாடுகளை எய்த ஏதுவாகின்றது. மேற்கூறிய வளர்ச்சிபற்றிய உண்மைகளை ஆசிரியர்களும் பெற்றேர் களும் அறிந்து குழந்தைகளின் வளர்ச்சியில் தக்க சூழ்நிலைகளை கல்கி ஏற்ற பயிற்சிகளையும் அளிக்கவேண்டும். குழந்தைகளின் திறன்கள் வளர்ச்சியின் சிகரங்களை அடையும் முன்னர், குழந்தையின் கடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் முதிர்ச்சியையும் கற்றலையும் பொறுத்தவை. முதிர்ச்சிக்குப்பின்னர் நடைபெறும் நடத்தை மாற்றங்கள் யாவும் கற்பதன் விளைவுகளே. இந்த வளர்ச்சியில் அடிப் படைக்கூறுகள் குடிவழியாக அமைந்து கிடப்பினும், சூழ்நிலையால் பெறக்கூடியவை யாவும் ஆசிரியர், பெற்ருேர்கள் கையில்தான் இருக் கின்றன. உடல் வளர்ச்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கியதோர் இயைபு உண்டு. உடல் முற்றி வளர்ந்த நிலையில்தான், முற்றிவளர்ந்த உள்ளத்தின் செய லும் புலப்படத் தோன்றுகிறது. குழந்தையின் உடலோடு குழந்தையின் உள்ளமும் வளர்ந்து வருதலின், உடல் வளர்ச்சியை ஆராய்வது இன்றி யமையாததாகின்றது. உடல் வளர்ச்சி உடல் கலத்திற்கும் நடத்தை வின் பொருத்தப்பாட்டிற்கும் முக்கியமானது. பிறப்பு, வளர்ச்சியின் தொடக்கம் அன்று ; ஆல்ை, அதற்கு ஒன்பது திங்கள்கட்கு முன்னர் கருத்தரித்தலே வளர்ச்சியின் தொடக்கமாகும். ஒரு குண்டூசியின் தலையைவிடச் சிறிய ஓர் உயிரணுவிலிருந்து ஒரு மனிதன் தோன்றுவது விந்தையினும் விந்தையென்றே சொல்லவேண்டும். உயரம் எடை முதலியவற்றில் : பொதுவாக வளர்ச்சியின்போக்கு குடிவழியால் அறுதியிடப் பெறுகின்றது; வளர்ச்சியின் விவரங்கள் சூழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/104&oldid=777706" இலிருந்து மீள்விக்கப்பட்டது