பக்கம்:கல்வி உளவியல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கல்வி உளவியல் போது அனிச்சைச் செயல்களாக இயங்குகின்றன. (எ.டு. சுவாசித்தல், உறிஞ்சுதல், விழுங்குதல், தும்மல், இருமல்போன்ற மறிவினைகள் 82 நாளடைவில் நரம்புக்கம்பிகள் உறைகளால் மூடப்பெறுகின்றன. இச் செயல் பிறக்குமுன்பே தொடங்கிவிடுகின்றது. ஆனல், நரம்பு மையங்கள் முழு வளர்ச்சியடைய நாளாகின்றது. இல்லாவிட்டால் பிறந்தவுடன் பல தாக்கல்களால் குழந்தைக்கு நெருக்கடி உண்டாகும். புதிய தூண்டல் களின் பயணுக மூளைப் புறணியை அடையும் பல பாதைகள் உண்டா கின்றன. முதல் யாண்டில் மூளையின் பருமன் நாளுக்குநாள் அதிகரிக் கின்றது ; குழந்தைக்குக் குல்லாய் விரைவில் போதாமல் போவது தாய் மார்கள் காணும் அனுபவம். தனிப்புலன்கள் அனுபவம் ஏற்படத் தொடங் கியவுடன் இயைபு மையங்கள் மூளையில் செயற்படும். நான்காம் வயதில் மூளை 100-க்கு 75 பங்கு கனத்தையும், 8-ஆம் வயதில் 90 பங்கு கனத்தை யும் 20-ஆம் வயதில் முழுக்கனத்தையும் அடைகின்றது. இயக்க வளர்ச்சி : முதலில் குழந்தை தன் உடலின் மேல் ஆட்சி புரியக் கற்கின்றது. உண்ணுதல், பருகுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் போன்றவற்றிற்கு இயக்க ஆட்சி தேவையல்லவா? முதல் முதலில் கைகள் இவற்றின் அசைவு, ஒரு பொருளைக் கையாளுதல், கடத் தல், கிற்றல், ஓடுதல், தவழ்தல், பேசுதல், எழுதுதல்போன்ற ஒவ்வொரு செயலும் இயக்கத்தையே நாடுகின்றது. பிறகு வாழ்வில் நாம் மேற் கொள்ளும் தொழில்களும் இயக்கங்களைப் பொறுத்தவையே, நல்வாழ்க் கைக்கு இயக்கங்களின் மேல் தகுந்த ஆதிக்கம் இன்றியமையாதது. கல் வியிலும் இயக்கம்பற்றிய தேர்ந்த அறிவும், இயக்கங்களைக் கண்காணிக் கும் திறனும் தேவை. இயக்கவளர்ச்சியிலும் ஓர் ஒழுங்குமுறை காணப்படுகின்றது, இயக் கங்கள் முறையாக வளர்ந்து பரவுகின்றன; கோலங்களாக அமைகின்றன. முதலில் கண்களின் இயக்கங்களே ஆளப்பெற்று ஒருங்கியைய வருகின் றன. அடுத்து, கழுத்துத் தசைகளின் இயக்கங்கள் ஒற்றுமைபெற்று விளங்குகின்றன. மூன்ருந்திங்களுக்குள் குழந்தை அப்புறமும் இப்புற மும் கழுத்தைத் திருப்புகின்றது ; பின்பு தலையையும் மார்பையும் தூக்கிக் கொள்கின்றது. நான்காம் மாதத்திற்குள் கண், தலை, கழுத்து முதலிய வற்றின் இயக்கங்கள் ஒருங்கியைய வருகின்றன. ஒருங்கியைய வருகின்றநிலை பின்னர்த் தோளுக்காக இயங்குகின்றது. தோள்களும் கைகளும் ஒருங்கியைந்து இயங்குகின்றன. கையால் தொடுவதும் பற்றுவதும் முதலான செயல்கள் நிகழ்கின்றன. குழவிகள் 15-ஆம் o a lo ó 68;ur - reflex action.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/109&oldid=777717" இலிருந்து மீள்விக்கப்பட்டது