பக்கம்:கல்வி உளவியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiw நூல்முகம் தமிழ்மொழியின் ஆக்கத் துறையில் பணியாற்ற விரும்புவோர் மேட்ைடு மொழிகளை-குறிப்பாக-எல்லாக் கலையறிவினையும் தன் னகத்தே அடக்கிக்கொண்டு வீறுடன் திகழும் ஆங்கிலத்தை-ஆழ்ந்து பயின்று மேட்ைடு அறிவியற் கலைகளையும் பிற கலைகளையும் ஆழ்ந்து கற்று அவற்றில் தெளிவான அறிவினைப் பெறுதல் வேண்டும். தமிழ் மொழியில் ஆழ்ந்த பயிற்சிபெற்று, இயன்றவரை தமிழ் மரபு கெடாதபடி மேனுட்டுக் கலைகளைத் தமிழில் மொழிபெயர்த்தலும் அக்கலைத் துறைகளில் தமிழில் 'முதல்நூல்கள்’ எழுதுதலும் வேண்டும். ஆங்கில மொழியில் இத் துறைநூல்களைப் பயிலுங்கால், அக்கலைத் துறையினர் எவ்வளவு உயர்ந்த மொழியுணர்ச்சியுடன் அந்நூல்களை எழுதியுள்ளனர் என்பதைத் தெள்ளிதின் உணரலாம். தமிழில் அங்ங்ணம் எழுதுவோர், அல்லது மொழிபெயர்ப்போர் ஒருவித வரம்புமின்றி மனம் போகின்ற போக்கில் எழுதிவருவது வருத்தத்தை விளைவிப்பதாகும். இங்கிலையில் கலைச்சொல்லாக்கப் பிரச்சினை எழுகின்றது. சிலர் இப்பிரச்சினையையும் போதனுமொழிப் பிரச்சினையையும் ஒன்று சேர்த்துப் போதளுமொழிப் பிரச்சினையை என்றும் தீரமுடியாத பிரச்சினைபோல் காட்டுகின்றனர். இரண்டற்கும் ஓரளவு தொடர்பு உண்டு என்பது உண்மையேயாயினும், இரண்டையும் அணுகவேண்டிய முறை வேறுவேறு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 1956-ஆம் யாண்டில் பி.டி. தேர்வுக்குரிய விருப்பப்பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் செய்த முடிவில் குறையிருப்பதன் காரணம் இதுவேயாகும். விருப்பப் பாடங்களைப் பயிற்றும்போது எத்தனையோ உளவியற் கருத்துக்கள், கல்வியற்றிய கருத்துக்கள் வருகின்றன. அப்பொழுது கலைச்சொல்லாக்கப் பிரச்சினை எழாமல் இல்லை. பி. டி. தேர்வு முழுவதையுமே தமிழில் எழுதலாம், பயிற்சிக் கல்லூரிகளில் எல்லாப் பாடங்களையும் தாய் மொழியிலேயே கற்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்குமாயின் இன்று ஓரளவு காணும் வெற்றியைவிடப் பன்மடங்கு வெற்றி கண்டிருக்கக்கூடும். பி. டி. பாடத்திட்டத்தைப் பொறுத்தமட்டிலும் ஒன்றிரண்டு யாண்டுகளில் இதனைக் கிட்டத்தட்ட முழுவெற்றிக்குக் கொண்டுசெலுத்தலாம் என் பதைச் சற்று உறுதியுடனேயே கூறலாம். அறிவியற் கலைகளைப் பொறுத்தமட்டிலும் கலைச் சொற்களை அனைத்துலகச் சொற்களாகவே ஒப்புக்கொள்ளுதல் பலவற்றிற்கும் கலம் பயக்கும் என்பது சிறியேனின் கருத்து. சாதாரணச் சொற்களை இயன்றவரை தமிழாக்கிவிடலாம். இது கல்லூரியில் பயிற்றுவதற்கு மேற்கொள்ளவேண்டிய முன்ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/11&oldid=777719" இலிருந்து மீள்விக்கப்பட்டது