பக்கம்:கல்வி உளவியல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 87 வாரத்தில் விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடுகின்றன. 38-ஆம் வாரத்தில் குழவி கவிழ்ந்து கொள்கிறது. பின்பு, பின்புறமாக நகர்கிறது. நாளடைவில் தவழ்தல், கிற்றல், நடத்தல், ஓடுதல் முறை யாக நிகழ்கின்றன. எனவே, தசைகளின் இயக்க வளர்ச்சியும் தலையி லிருந்து இறங்கிவரக் காண்கின்ருேம். இயக்கத் துலக்கத்தில் நாம் காணும் உண்மை என்ன? தூண்ட லின்* பின் துலங்கல்கள் எழும் வேகம் விரைந்து வளர்தலே வளர்ச்சி யின் முதல் இயல்பு. புதியபுதிய துலங்கல்களைக் குழவிகள் கண்டு கொள்கின்றன. இது இரண்டாவது இயல்பு. தற்செயலாக எழும் பொருளற்ற இயக்கங்கள் தாமாக மறைகின்றன. இது மூன்ருவது இயல்பு. குழவி உரிமையுடன் இயங்கி வரும்பொழுதுதான் இத்தகைய வளர்ச்சிவளம் அதிகரிக்கின்றது. ஆதலின், குழவிகளின் இயக்கங் களைத் தடுத்தலாகாது. முதலில் குழந்தைகளின் செயல்கள் திருத்த முருமலும் பண்படையாமலும் இருக்கலாம். இதுபற்றிக் குழந்தைகளைக் குறைகூறலாகாது. குழந்தைகள் பல வேலைகளைச் செய்ய முற்படும் ; அதற்கு நாம் இடந்தர வேண்டும். உள்ளிருந்து துடித்துக் கொண்டு வரும் ஆற்றலுக்குத் தடை போடக்கூடாது ; அவர்கள் செயலில் குறுக் கிடவும் கூடாது. தகுந்த வாய்ப்புக்கள் கொடுத்தால் அனைத்தும் தாமாகவே சீர்படும் ; ஒழுங்காக அமையும். வளர்ச்சிக்குத் திட்டமான நெறிகள் உள்ளன என்று மேலே கூறியதை ஈண்டு நினைவுகூர்க. கைத்திறனையும் கையெழுத்துத் திறனையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கூறிய உண்மைகளே கினேவில் வைத்துக் கற்பித்தல் வேண்டும். பாடத்திட்டம் அமைப்பதிலும் இவை கவனம் பெறவேண்டும். அறிவுத் துறைக்கு மதிப்புத் தருவதைப்போல் இயக்கத் திறனுக்கும் தக்க மதிப்புத் தருதல் வேண்டும். இதனையே தற்காலக் கல்வித் திட்டம் மிகவும் வேண்டுவது. உள்ளக் கிளர்ச்சியின் துலக்கம் 'உள்ளக் கிளர்ச்சி’ என்பது என்ன என்பதை வரையறைப்படுத்திக் கூறமுடியாது. ஒவ்வொருவரும் இதனை நன்கு உணர்வாராயினும், சொற்களால் உணர்த்துவது மிகக் கடினம். வெகுளி, அச்சம், மகிழ்ச்சி, இன்பம், வெறுப்பு இவை போன்ற மெய்ப்பாட்டு நிலைகளைக் குறிப்பதே உள்ளக் கிளர்ச்சி என்பது. தீவிர உணர்ச்சி, உள்துடிப்பு, உடலின் செயல்கள் ஆகியவற்றின் சேர்க்கையே உள்ளக்கிளர்ச்சியாகும்.

  • 851sor & – stimulus, 84 5&tio - response.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/110&oldid=777722" இலிருந்து மீள்விக்கப்பட்டது