பக்கம்:கல்வி உளவியல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கல்வி உளவியல் உணர்ச்சி* இன்னது என்பதை ஒவ்வொருவரும் தாமே அறிதல்கூடும். வெகுளியால் முன்சென்று தாக்குதல், அச்சத்தால் வெருண்டோடுதல், வெறுப்பால் வாந்தி பண்ணுதல், மகிழ்ச்சியால் குதித்தல், துயரத்தால் முகம் வெளுத்தல் போன்றவை உட்துடிப்புக்களையும் உடலின் செயல் களையும் குறிக்கின்றன. எனவே, உணர்ச்சிகள், துடிப்புக்கள், பூத உடல்நிலை, எதிர்வினை ஆகியவை அனைத்தும் உள்ளக்கிளர்ச்சியினுள் அடங்கும் என்ருகின்றது. திடீரென்று எழும் வெடிப்பு நிலைகளில் மட்டிலும் உள்ளக்கிளர்ச்சி தோன்றும் என்று கருதுதல் தவறு ; அது கம் சிந்தனைகள் செயல்கள் முதலிய அனைத்தையும் பற்பல அளவுகளில் அடக்கியாளுகின்றது. உள்ளக்கிளர்ச்சிகளைப்பற்றி ஐந்தாம் அத்தியா யத் தில் விளக்கப் பெற்றுள்ளது ; ஆண்டுக் கண்டு கொள்க. முதலில் தோன்றும் எதிர்வினைகள்? : வாழ்க்கையின் தொடக் கத்தில் குழந்தை அழுது காலையும் கையையும் அடித்து உள்ளக் கிளர்ச்சி வாய்ந்த செயல்களை இயற்றுகின்றது. ஏனைய நடத்தைக் கூறுகளில் தோன்றுவதைப்போலவே, உள்ளக்கிளர்ச்சியிலும் தனிப்பட்ட வெகுளி, அச்சம், மகிழ்ச்சி, துயரம் போன்ற வேற்றுமைகளை உணர்த்தும் எதிர்வினைகள் தோன்றுவதில்லை. முதலில் தோன்றும் எதிர்வினைகள் பொதுத் துடிப்புக்களாகவே தோன்றுகின்றன. நாளடைவில்தான் மேற் குறிப்பிட்ட பாகுபாடுகள் தெளிவுறுகின்றன. குழந்தையின் ஆற்றல்கள் முற்றமுற்ற, அதனது பட்டறிவு மிகமிக, உள்ளக்கிளர்ச்சிகளைத் தூண்டும் ஏதுக்களில் மாறுபாடுகள் நிகழ்கின் றன. முதலில் நேராகத் தாக்கும் தூண்டல்களே உள்ளக்கிளர்ச்சிகளை எழுப்பும். (எ.டு. பேரொலி, மின்னல், முகத்தில் வேகமாகக் காற்று தாக்குதல், திடீரென ஆதரவை இழத்தல் போன்றவை அச்சத்தை விளை விக்கும். உரிய காலத்தில் பால் கொடுக்கப்பெருமை, தாகை எழும் கைகால்களின் இயக்கங்களுக்குத்தடை போன்றவை சினத்தை உண் டாக்கும். வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறுதலும், மனநிறைவுதரும் இயக்கங்களும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றன. முதலாண்டில் உள்ளக்கிளர்ச்சி வெளிப்பாட்டில் ஏற்படும் மாற் றம் : குழந்தை பிறந்து சில திங்கள்களில் தோன்றும் சிறப்பான வெளிப் பாடொன்று ஆள் முகத்தைக் கண்டு முறுவலித்தல் ஆகும். இன்னும் சிறிதுகாலத்தில் முகத்தில் நகை தோன்றுகிறது. நான்கு வாரங்களில்

  • உணர்ச்சி - teeling. 38உள்துடிப்பு - impulse, 31உடலின் செயல் <#ér- bodily activities. 3 8 st#|# sääsr&çir - reactions.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/111&oldid=777723" இலிருந்து மீள்விக்கப்பட்டது