பக்கம்:கல்வி உளவியல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 89. பசி, வெகுளி, வலி என்பவற்றிற்கு வெவ்வேறு வகையான அழுகை தோன்றுகிறதென்று கெசல்’’ என்ற உள நூலறிஞர் கண்டறிந்துள் ளார். இந்த அழுகைப்பண்பு குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். எனவே, தன் குழந்தையின் அழுகைப்பண்பை நன்குணர்ந்த ஒருதாய் மற்ருெரு குழந்தை அழுவதன் காரணத்தை அறிதல் அரிது. முதலாண்டு கிறைவேறுவதற்கு முன்னர் அச்சம், அன்பு, இன்பம் ஆகிய வற்றை வெளிக்காட்டும் அறிகுறிகளைக் காணலாம். வயது முதிர்ச்சியால் மாற்றம் : வயது முதிரமுதிர உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் சின்னங்கள் மாற்றம் அடைகின்றன. (எ-டு.) குழந்தைப் பருவத்தில் காலைக்கிள்ளிகுல் காலைமாத்திரம் வெடுக்கென்று இழுக்காமல் உடல் முழுவதையும் அசைத்த குழந்தை, இப்பொழுது காலே மட்டிலும் இழுக்கின்றது. உள்ளக்கிளர்ச்சி வெளிப்பாடு இவ்வாறு குறைந்து வருகின்றது. ஏழு அல்லது எட்டுத் திங்கள் கிறைவெய்திய குழந்தைக்குப் பசி எடுக்கும்போது பால் கொடுக்கத் தாமதம் செய்தால், அதன் உடல் எல்லாம் செயலாக அமைந்துவிடுகின்றது. உதைத்து நெளிந்து, கத்திக்கரைகின்றது; வெறிகொண்டு அலறுகின்றது; சினத் தைக் கக்குகின்றது. குழந்தை வளரவளர இச் செயல்கள் குறைகின்றன. ஏறக்குறைய ஏழு ஆண்டில் குழந்தை உடல் முழுவதையும் அலட்டிக் கொள்வதில்லை. உள்ளக்கிளர்ச்சியின் ஆடம்பரம் குறைந்து அச்சமும் வெகுளியும் அடங்கியே வெளிப்படுகின்றன. இப்பொழுது குழந்தை எதற்கெடுத்தாலும் அழுவதுமில்லை. இங்ங்ணம் மாற்றங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தைக்கு அதிக அனுபவம் ஏற்பட்டுவிடுகின்றது. மொழியாலும் பிற குறியீடுகளாலும் தன் உணர்ச்சிகளை நுட்பமாகக் கூறும் திறமை யைக் குழந்தை பெறுகின்றது. வன்செயல்களாலும் முரட்டுத்தனத் தாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதை அறிகின்றது. பெற்றேரும் பிறரும் பாலமை49தவிர்தி’க் யென்றும், பெரியபிள்ளையாக இருக்கவேண்டும் என்றும் குழந்தையை இடைவிடாது வற்புறுத்து கின்றனர். சிறுவனும் நாளடைவில் புண்பட்ட மனத்தையும் கண்ணி ரையும் மறைக்கக் கற்றுக்கொள்ளுகின்றன். தன்னை அச்சுறுத்தவும் புண்படுத்தவும் சினப்படுத்தவும் கூடிய நிலைமைகள் உண்டென்பதைத் தானும் ஒப்புக்கொள்ளாமல், பிறருக்கும் வெளிப்படுத்தாமல் வாழத் தொடங்குகின்ருன். s 9@æssò - Gesel. 4 oureosoto - childlish në SS. 4.கம்பாா-கிட்கிங்-வாலிவதை 148.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/112&oldid=777725" இலிருந்து மீள்விக்கப்பட்டது