பக்கம்:கல்வி உளவியல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கல்வி உளவியல் பள்ளிக்குச் செல்வதற்குள் சிறுவனின் உணர்ச்சிகளில் பெரும் பான்மையானவை மறைகின்றன ; அல்லது மாறுபடுகின்றன. ஆயினும் உள்ளக்கிளர்ச்சிகளின் வெளிப்பாடு குறையினும், உள்ளிருக்கும் உள்ளக் கிளர்ச்சி அனுபவங்கள் குறைவதில்லை. நேர் வெளிப்பாடு குன்றுத லாலும், எல்லா உள்ளக்கிளர்ச்சிகளேயும் சொல்லால் உணர்த்தமுடியாத தாலும், குழந்தையின் கடத்தையை அச்சம், வெகுளி, வெறுப்பு போன்றவை எவ்வாறு ஆளுகின்றன என்பதை அறிந்து கொள்வது அரிதாகின்றது. எனவே, சிறுவன ஊன்றிக் கவனிக்க வேண்டும். நாளடைவில் அறிவு இயக்கத்திறன்கள், கவர்ச்சிகள், கற்பனையாற் றல்கள் ஆகியவை முதிர்ச்சி பெறுகின்றன. தற்போதைய தேவைகளே விட நீண்ட வருங்காலத் தேவைகளும் பழைய நினைவுகளும், புதிய திட் டங்களும் உள்ளக்கிளர்ச்சிகளை அறுதியிடுகின்றன. முன்னர் மகிழ்ச்சி யூட்டிய மாடிப்படி ஏறுதல், சக்கரம் உருட்டுதல், பொம்மை வைத்து விள யாடுதல் போன்றவை இப்பொழுது மகிழ்ச்சி தருவதில்லை. பட்டம் விடு தல், பம்பரம் விடுதல் போன்றவை மனநிறைவு தருகின்றன. முன்னல் அங்கியரைக் கண்டு அஞ்சினவன், இப்பொழுது தன்னை மருட்டியவனையும் அடித்தவனையும் கண்டு அஞ்சுகின்றன். குமரப்பருவத்தில் பஞ்சம், போர் போன்ற சமூக நெருக்கடியான செய்திகளைக்கண்டு அஞ்சுகின்றன். குழந்தையின் கிளர்ச்சி நடத்தையைப் புரிந்து கொள்ளுதல் : குழந்தைக்கு நேரிடும் செயல்களால் அவனிடம் கிளம்பும் உள்ளக் கிளர்ச்சிகள் அவனுடைய மனநிலையைப் பொறுத்தவை. குழந்தையின் மனநிலையை அறிந்தால், கியாயமற்ற நடத்தை என நாம் கருதும் பல வற்றை விளக்கமுடியும். அபாயமில்லாதபொழுது குழந்தை அஞ்சின. லும், குறை சொல்லுவதற்கு முன் மனம் நொந்தாலும், அச்சத்திற்கும் வெகுளிக்கும் காரணமில்லை யென்று ஆலோசனையின்றிக் கூறுவதால் பயன் இல்லை. அவன் முன்னமே அல்லலுற்றிருப்பதால் எளிதில் அஞ்சு கிருன் என்றும், தன்னம்பிக்கை இன்மையாலும் மற்றவர்கள்பால் கொண்ட எதிர்ப்பாலும் அவன் குறை கூறுவதால் புண்படுகின்றன் என்றும் அறிதல் வேண்டும் ; அவற்றிற்குரிய காரணங்களைக் கண்ட றிந்து அவனைக் குணப்படுத்த முயலவேண்டும். குழந்தையின் உள்ளக்கிளர்ச்சிகள் பள்ளிச்செயல்களுடனும் கலந்து கிற்கின்றன. பாடத்திட்டம் நன்முறையில் அவனுடைய ஆற்றலுக் கேற்றவாறு அமைந்திருப்பதால், குழந்தை தான் சாதிப்பதில் மகிழ்ச்சி யடைகிறன். மேலும் உடன்பயில்வோர், உடன்விளையாடுவோர் அவனி டமும், அவன் அவர்களிடமும் காட்டும் அன்பு, பரிவு, வெறுப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/113&oldid=777727" இலிருந்து மீள்விக்கப்பட்டது