பக்கம்:கல்வி உளவியல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 9i போன்றவையும் அவன் வாழ்க்கையில் முக்கியமானவை. ஆசிரியரின் பாடம் பயிற்றும் திறமையைவிட, அவர் காட்டும் அன்பையும் பரிவை யுமே குழந்தை அதிகமாகக் கவனிக்கின்றது. கடுமையும் உறுதியும் இன்றியமையாதவையே; எனினும், குழந்தையின் ஆற்றல்கள் வளர்வ தற்கு அன்புடன் தரும் வாய்ப்புக்களே பெரிதும் மனநிறைவு தரக்கூடி யவை. குழந்தைகளை வாளாஇருக்கச் செய்தலாலும், பழகிய இயக் கத்தையே திரும்பத்திரும்பச் செய்யும்படி ஏவுதலாலும், அவர்களின் திறன்களுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யும்படி ஏவுதலாலும், குழந்தை களிடம் அலுப்பும் எதிர்ப்பு மனப்பான்மையும் தோன்றும் என்பதை ஆசி ரியர்களும் பெற்றேர்களும் உணர்தல் வேண்டும். சமூகப்பண்பு வளர்ச்சி ** குழவி சுற்றுபுறச் சூழலால் மாறி வருவதனைப் பலமுறை குறிப்பிட்டுள்ளோம். பிறரோடு கூடி வாழ்வதே மக்கள் இயல்பு. சமூகத்தை விட்டுப் பிரித்துத் தனியாளே உணர்வது இயலாது. உணவுப்பொருள் விளைவிப்போர், உடை நெய்வோர், வணிகர் போன்ற பலருடைய துணையால் நம் வாழ்வு கடைபெறுகின்றது. எனி னும் நான் எனது என் உரிமை போன்ற எண்ணங்கள் மக்களிடம் ஓயாமல் குடிகொண்டுள்ளன. சமூகம், தனியாள் என்ற இரண்டு எண் ணங்களிடையேயும் ஓயாமல் போராட்டம் நடைபெற்ற வண்ணமிருக் கின்றது. எனவே, குழவி சமூகத்திற்கு இணங்கத் திருந்திப் பொருத்தப் பாடு அடைந்து வருவதனையும் அறிந்தாலன்றி நாம் குழந்தை வளர்ச்சி யைப்பற்றி முழுமையும் அறிந்தவர்களாதல் இல்லை. தவிர, சமூக வளர்ச்சி உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சி போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை என்றும் கினைவில் இருத்தல் வேண்டும். எனவே, குழந்தையிடம் சமூகப்பண்பு வளர்ச்சி நடைபெறுவதனைக் கவனிப்போம். இவ் வளர்ச்சியின் போக்கு: சமூக வளர்ச்சியில் திட்டமான நிலை கள் இன்னவை என்று வரையறை செய்து கூறுவதற்கில்லை. இங்கு சில பொதுவான போக்குகளே கூறப் பெறுகின்றன. பிறந்த குழவியிடம் சமூகஉணர்ச்சி இருப்பதாகச் சொல்ல முடியாது. அஃது இருக்கிறது என்று கூறுகிறவர்கள் கற்பனையுலகில் வாழ்கின்றவர் களே. பிறந்தவுடன் தாய் பாலூட்டி இன்பமாகப் பாராட்டியும், உறங்கு 42 #Gpsủ usiờrtị susĩ ữả # - SoGiaiĩ đeVelopment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/114&oldid=777728" இலிருந்து மீள்விக்கப்பட்டது