பக்கம்:கல்வி உளவியல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 93. தவிர்க்கின்றன். பிறருடைய உரிமைகளையும் ஒருவாறு உணர்கின்ருன். பிறநிலையில் தன்னை வைத்துக்கொண்டு தன்னைப்போல் பிறரை எண்ண வும் சிறுவன் குடும்பத்தில்தான் கற்கின்றன். முதலில் குடும்பத்திளுள்ளா ரோடு மட்டும் பழகிவரும் சிறுவன் பிறகு குடும்பத்திற்கு அப்பாற் பட்ட வருடனும் பழகத் தொடங்குகின்றன். இவ்வாறு சிறுவனின் சமூக, எல்லை அகண்டுகொண்டே வருகின்றது. - பள்ளிக்குவரும் வயதுடைய பிள்ளைகள் குழுத்தன்மை பெற்ற4 ச. உயிரிகளாக உள்ளனர். தொடக்கநிலைப் பள்ளியில் புகும்பொழுது அறி. வும் மொழியும் வளர்ச்சி பெறுகின்றன. இவையும் சமூகவளர்ச்சியில் சிறந்த பங்கு பெறுகின்றன. சிறுவன் பலபொருள்களைப்பற்றி அறிய. விழைகின்ருன் , பல விளுக்களை விடுக்கின்றன். வினவுதல் பிறரிடம் தோடர்புகொள்ளும் வழியென்பதை நாம் அறிய வேண்டுவதொன்று. விளுக்கள்மூலம் பிறரைப் பேச்சுக்கிழுக்கின்றன் ; அவர்கள் நட்பையும் பேறுகின்றன். மேலும், விளையாட்டு சமூகப்பண்பு வளர்ச்சியில் சிறந்த, தோர் இடம் பெறுகின்றது. அது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிறர் உரிமை, தன்மதிப்புபோன்ற பண்புகளை வளர்ப்பதில் இணையற்றதாகும். குடும்பத்தில் பிறர் உரிமையை ஓரளவு அறிந்தாலும், பள்ளியில் ஒரே வயதுடைய தன்னைப்போன்ற பல சிறுவர்களுடன் பழகுகின்றன். வீட்டில் ஏற்காத பொறுப்புக்களை ஏற்கும் வாய்ப்புக்கள் அங்குக் கிட்டுகின்றன. வகுப்பிலுள்ளோர் எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளப் பழகுகின்றன். எது. சரி, எது தவறு என்பதை கன்குஉணர்கின்ருன். குழுவேலை, குழு விளை யாட்டுபோன்றவற்ருல் குழுவுணர்ச்சி உண்டாகின்றது; குழுவுடன் ஐக்கிய மாகி விடுகின்ருன். குழுவிற்கு முனைந்து பாடுபடுதலே கடமை என்பதாக அறிகின்றன். இதில் போட்டி மனப்பான்மை’ சிறந்ததோர் இடம் பெறு கின்றது. கூட்டு விளையாட்டு பத்துவயதில் தோன்றுகின்றது என்று கூறுகின்றனர். நடத்தை குழந்தை கிலேக்குத் தக்கவாறு மாறுவதாலுக் கூட்டு விளையாட்டு திடீரென்று தோன்றும் ஒரு சிறப்புச் செயலன்று ஆதலாலும், இவ் வயதைத் திட்டமாகக் கூற இயலாது. உண்மையில் இரண்டாம் வயதிலிருந்தே கூட்டு விளையாட்டு ஒருவாறு தொடங்கு கின்றது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே வகையான விருப்ப கிலேயும் அக்கறையும் உள்ள குழவிகன் நேருக்கு நேராகக்கூடி விளையாடி வருகின்றன. இத்தகைய குழுவில் சட்டதிட்டம் ஒன்றும் இல்லை. விளையாட்டின்போது ஒன்றுகூடும் கூட் 45 குழுத்தன்மைபெற்ற - socialized. 45 போட்டி மனப்பான்மை - competitive spirit.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/116&oldid=777732" இலிருந்து மீள்விக்கப்பட்டது