பக்கம்:கல்வி உளவியல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கல்வி உளவியல் டத்திலும்கூட ஒற்றுமையும் கருத்து வேற்றுமையும் உண்டு. ஆளுல் பேச்சுக் கூட்டாளிகளாக இருக்கும்பொழுது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. பால்வேற்றுமை, பொருளாதார வேற்றுமை, சமய வேற்றுமை என்றவற்றிற்கெல்லாம் இடமின்றி இவை அமைகின்றன. இவற்றி ளிைன்றே தோழமைகிலே பழுக்கின்றது. பள்ளியினின்றும் ஒருங்கே வீடு திரும்பும்பொழுதும் விளையாட்டில் ஒருங்கே ஆடி வரும்பொழுதும் தோழமை முளைவிடத் தொடங்குகின்றது, எல்லா வயது நிலைகளிலும் இத் தோழமை விளங்கக் காணலாம். பின்பற்றல்' அல்லது சாயல்பிடித்தல் பண்பும் சமூக உணர்ச்சியை வளர்க்கின்றது. சமூகத்தின் பழக்க வழக்கங்கள் நம்முடைய பழக்க வழக்கங்களாகின்றன. ஒத்துணர்வு வளர்கின்றது. சில குழவிகள் தனி மரங்கள்போல் பிறருடன் பழகுவதில்லை. இவ்வகைக் குழவிகள் அக முகர்களாக*, அஃதாவது தம் எண்ணங்கள் உணர்ச்சிகள் ஆகியவற் றையே கவனிப்பவர்களாக, ஆகின்றனர். ஆசிரியர்கள் சமயோசிதமாக வும் படிப்படியாகவும் அவர்களைப் பிற குழவிகளுடன் விளையாடவும் கூடி வேலை செய்யவும் பழகவைத்து, ஒரளவு புறமுகர்' களாகச் செய்ய வேண்டும். - ஆண்-பெண் தொடர்பு : சிறுவர்களும் சிறுமிகளும் முதன் முத லாகச் சமவயதினரோடு சேர்ந்து விளையாடுங்கால் அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு தலைகாட்டுவதில்லை. பள்ளியில் சேர்வதற்கு முன்னும் தொடக்க நிஐலப்பள்ளி முதலாண்டிலும் இரு பாலாரும் சேர்ந்து விளையாடுகின்றனர். பழக்க வழக்கங்களோ பெரிய பிள்ளைகளோ தடுத்தாலன்றி ஒரு குழந்தை பெரும்பாலும் எதிர்பாலாரால் அமைக்கப்பெற்ற குழுவினில் சேர்ந்து விளையாடத் தயங்குவதில்லை. தொடக்கத்திலேயே சிறுவர்களும் சிறுமி களும் தக்க எண்ணிக்கைகளில் இருந்தால் சிறுவர்கள் சிறுவர்களோடும் சிறுமிகள் சிறுமிகளோடும் சேர்ந்து தனித்தனியாகவே விளையாட முற் படுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது. தொடக்கநிலைப் பள்ளிகளின் முதலாண்டிலும் இடையாண்டுகளிலும் இத்தகைய பிரிவு நன்கு தோன்றுகின்றது. ஆயினும், குமரப் பருவம் நெருங்குங்கால் இருபாலாரும் இரு திறத்தினரையும் ஒன்ருகக் கூட்டும் செயல்களை நாடுகின்றனர். இந்த எதிர்பால் கவர்ச்சிப் பெருக்கம் பையன்களைவிடப் பெண்பிள்ளைகளுக்கே முந்தி ஏற்படுகின்றது. பெண் – 47 asirupp& -imitation. 48 esgpsst - introvert. 4o 4pgesi - «SXtrOVSrt.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/117&oldid=777734" இலிருந்து மீள்விக்கப்பட்டது