பக்கம்:கல்வி உளவியல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 95 பிள்ளைகள் பையன்களுக்கு ஏறத்தாழ ஒன்றரையாண்டுகட்கு முன்னரே கவர்ச்சியில் வளர்கின்றனர். பையன்களுக்குள்ளே இம் மாறுதல்கள் தோன்றுவதில் நான்கு யாண்டுகள் வரைக்கும் வேற்றுமை காணப் பெறலாம். மூத்தோர்களுக்கு : மூத்தோர்களாகிய ஆசிரியர், பெற்றேர் இவர் களின் முக்கிய குறிப்பினை இவண் குறித்தல் வேண்டும். குடும்பத்திலாயி னும் சரி, பள்ளியிலாயினும் சரி, குழந்தைகள் ஒருதலே ஆதரவு காட்ட லாகாது; தனிச்செல்லம் காட்டலாகாது ; தம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு காட்டலாகாது. ஆசிரியரும் பெற்றேரும் சில சமயங்களில் அவர்கள் அனுமதியாத செயல்களைப் பிறரிடம் செய்கின்ற னர் என்பதைச் சிறுவர்கள் அறிகின்றனர். சரியான சமூகப்பண்பு வளர்ச்சிக்கு இவை ஏற்றன அல்ல. ஏறக்குறைய 12 வயதில் குமரப்பருவம் தலைகாட்டுகின்றது. இப் பருவத்தில் சமூகப்பண்பு வளர்ச்சி சிறந்தோங்கும். இப்பொழுது பிறர் உரிமையறிதல், எதிர்பாலில் கவர்ச்சி, சமூகத்தொண்டு போன்றவை தனித்து விளங்குவதைக் காணலாம். இப் பருவத்தில் விளையாட்டுக்கள், விழாக்கள், குழுக்கள், கழகங்கள், சுற்றுலாக்கள், சாரணர்படை போன் றவை தன்னலம் கருதாது குழுக்கிளர்ச்சியை" உண்டாக்கிப் பரந்த நோக்கத்தை வளர்க்கின்றன. நாட்டுப்பற்று, சர்வதேசப்பற்று என்றவை நாளடைவில் தோன்றுகிறது. . தலைமைப் பண்பை வளர்த்தல் : இளைஞர்களைத் தகுந்த தலைவர் களாக பழக்கும் நோக்கத்தையும் கல்வி கிறைவேற்ற வேண்டும். தலை மைக்கு உடல்கவர்ச்சி, உடல்நலம் முக்கியமானவை. முக்கியமாகக் குறிப்பிட்டதுறையில் திறமை இருத்தல்வேண்டும். தோழமை, பகைமை ஏற்படுத்திக்கொள்ளாமை, பல்வேறுபட்ட மக்களுடன் பலவகையில் பழ கக் கற்றுக்கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் இயல்பு, குழுவின் விருப்பத் திற்கு மதிப்பு தருதல், ஏமாற்றமில்லாமல் மனமார உழைத்தல், ஒத் துழைப்பு, உயர்ந்த குறிக்கோள்கள், மரியாதைபோன்ற பண்புகள் தலைமை பூண்பதற்குத் துணைசெய்பவை. பள்ளி இவற்றில் கவனம் செலுத்தி அவை மாளுக்கர்களிடம் வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். 5 o 9(55&ò #57 są - favouritism. 51 குழுக்கிளர்ச்சி - esprit. de-Corps.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/118&oldid=777737" இலிருந்து மீள்விக்கப்பட்டது