பக்கம்:கல்வி உளவியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் X亨 பொதுமக்களுக்கென்று எழுதப்பெறும் நூல்களில் இயன்றவரைமிகச் சிக்கலான சொற்களைத் தவிர-அனைத்தையுமே தமிழாக்க முயலலாம். ஆயின், பல யாண்டுகள் அனுபவத்திற்குப் பிறகுதான் எதனையும் ஒரு வரையறைக்குள் கொண்டு வருதல் இயலும். கல்வித் துறையில் எத்தனையோ சீர்திருத்தங்கள் வந்து கொண்டே யிருக்கின்றன. பாடத் திட்டங்கள் அடிக்கடி மாற்றியமைக்கப் பெறு கின்றன. பெரும்பாலும் அறிஞர்கள் அனைவருமே பாடப் பொருள்களில் கருத்தினை அதிகம் செலுத்துகின்றனரே யன்றி, பாடங்களைப் பயிலும் மாணுக்கர்களைப்பற்றி அதிகம் ஆராய்வதில்லை. மாணுக்கர்களின் மனநிலை, அறிவுகிலை, உணர்வுநிலைபோன்ற கூறுகளைக் கவனியாமல் செய்யப்பெறும் எந்தத் திட்டங்களாலும் அதிகமான நற்பயன் விளையாது. எங்கிலையிலும் கற்பிக்கும் ஆசிரியர்கட்குக் கல்விஉளவியல் அறிவு மிக மிக வேண்டற்பாலது ; கல்வித்துறைபற்றிய அறிவும் இன்றியமை யாதது. பயிற்றுதலில் எவ்விதமான பயிற்சியுமின்றிக் கல்லூரியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வழக்கம் அவ்வளவு பயன் தாராது. பல பாண்டு. கள் கழித்து அனுபவத்தில் தெரியும் செய்திகளை ஒரே யாண்டில் பயிற்சிக் கல்லூரியில் தெரிந்து கொள்ளலாம். இவற்றை யறிந்து கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் சற்று உயர்நிலையிலேயே இருக்கும் என்பதைச் சிறிது துணிந்தே கூறலாம். இந்நூல் கல்விஉளவியல் பற்றியது. கற்பித்தல் துறையில் பணி யாற்றும் ஆசிரியர்களும் சிறுவர்களின் கல்வியில் அக்கறை கொள்ளும் பெற்றேர்களும் பொதுமக்களும் இன்றியமையாது படிக்க வேண்டிய நூல். கல்வித்துறையில் எந்த அளவுக்கு உளவியல் பயன்படுகின்றது என்பதை விளக்கிக் கூறுகின்றது இந்நூல். ஆசிரியர்பயிற்சிப்பள்ளி. மாணுக்கர்கட்கு மிகவும் ஏற்றது; பயிற்சிப்பள்ளி, ஆதாரப்பயிற்சிப் பள்ளிக்குரிய கல்வி உளவியல்பற்றிய பாடத் திட்டங்களை யொட்டி எழுதப்பெற்றுள்ளது. இத்துறையில் ஒரு சில நூல்கள் எழுந்துள் ளன. இன்னும் இத்துறையில் பல நூல்கள் வெளிவரவேண்டும். கல்வித்துறையில் எழும் பிரச்சினைகளுக்கு உளவியல் அடிப்படையில் பல கோணங்களிலும் தீர்வு காணப்பெறுதல் வேண்டும். இந்நூலில் மாளுக்கர்கட்கும் பிறருக்கும் இயல்பாக எழும் ஐயங்களைப் பல இடங்க களில் பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டும் படங்களைக் கொண்டும் போக்கியிருக்கின்றேன். இதன் காரணமாக நூலும் சற்று நீண்டுவிட்டது. மாளுக்கர்கள் நூலின் நீட்டத்தைப் பொருட்படுத்தாது விளக்கத்தை. மட்டிலும் பொருட்படுத்தி இந்நூலைப் பயில்வார்களாக, படிக்கும் மாளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/12&oldid=777741" இலிருந்து மீள்விக்கப்பட்டது