பக்கம்:கல்வி உளவியல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கல்வி உளவியல் எண்ணிக்கை விரைந்து வளர்கின்றது. இரண்டாம் யாண்டில் 250 சொற்களும், மூன்ரும் யாண்டில் 850 சொற்களும், நான்காம் யாண்டில் 1,500 சொற்களும், ஐந்தாம் யாண்டில் 2,000 சொற்களும், ஆரும் யாண் டில் 2,500 சொற்களும் விளங்குகின்றன. அறிவும் பரப்பிலும் ஆழத்தி னும் வளர்ச்சி பெறுகின்றது. சிறுவன் சொற்களைக் கையாளுவதி லிருந்து அவனுக்கு அவற்றின் திட்டமான அறிவு ஏற்பட்டுவிட்டது என்று கருதலாகாது; பொருள் விளங்காத பல சொற்களைக் கிளிப்பிள்ளைபோல் சொல்லுவான். முதலில் அவன் பொருள்களைப்பற்றிக் கூறும் இலக்க ணம் அவற்றின் பயனத் தழுவியதாகவே இருக்கும். (எ-டு. கத்திவெட்டுகிறது ; தாய்-பாலூட்டுபவள். முழுமையான இலக்கணம் நாளடைவில்தான் தோன்றும். அறிவுச்செயல்களில் முதலாவது புலன்உணர்ச்சி யாகும். அது ஒலி, ஒளி போன்ற பண்புகளைப் புலன்களைக்கொண்டு அறிதலாகும். ஆளுல், புலன்காட்சி (perception) என்பது இப் பண்புகளையுடைய பொருள்களை அறிதல் ஆகும். (எ-டு.) " இது ஒரு எலுமிச்சம்பழம் ” என்பது புலன் காட்சி, முன்னைய அனுபவத்தைக் கொண்டு புலன் உணர்ச்சியை விளக்குவது புலன் காட்சியாகும். உருண்டை வடிவத் தையோ மஞ்சள் நிறத்தையோ பார்த்தல் புலன் உணர்ச்சியாகும். இன்னெரு எடுத்துக்காட்டு : ஒருவர் தன் அறையில் துயில்கிருர், யாரோ ஒருவர் கதவைத்தட்டுகின்றர். ஒலியலைகள் உண்டாகி துயில் பவரின் காதை அடைகின்றன. அவர் எழுந்திராததால், அவ் வொலி யலைகளை அறிய முடியவில்லை. திரும்பத்திரும்ப வரும் ஒலியலைகள் அவரை எழுப்புகின்றன ; இப்பொழுது ஓரளவு ஒலி கேட்கின்றது. இது புலன் உணர்ச்சியாகும். யாரோ தட்டும் ஒலி என்று அறிந்தால் அது புலன் காட்சியாகின்றது. பொதுவாகக் கூறினல், புலன் உணர்ச்சி என்பது தூண்டல்கள் புகுவாய்களை அடைவது ; புலன் காட்சி என்பது நாம் புலன்களைக் கொண்டு பொருள்களை அறிவது. அறிவுச் செயல்களில் மற்ருெருவகை நினைவு" என்பது. முன்னர் கடைபெற்ற நிகழ்ச்சியைப் பின்னர் வேண்டுமிடத்து அறிவது கினை வாகும். நாம் பார்த்த பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற் றையும், கேட்டசொற்கள், அறிந்த தகவல்கள் முதலியவற்றையும் நினைவில் வைக்காவிடில் வாழ்க்கை எங்ங்ணம் நடைபெறும் ? நினைவுச் scussor o-writéâ - sensation. 57 (£&rs - memory.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/121&oldid=777745" இலிருந்து மீள்விக்கப்பட்டது