பக்கம்:கல்வி உளவியல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 10f யர்களாகவும் இன்னும் தம் மனம்போன போக்கில் பலவாருகவும் உண்மை உலகுடன் ஒத்து நடிக்கின்றனர். இங்ங்ணம் மனத்தின் அறிவுக்கூறு புலன்உணர்ச்சி, புலன்காட்சி, மானதக் காட்சி, நினைவு, சிந்தனை ஆகிய வற்றின் மூலம் துலங்கி வளருகின்றது. குழந்தையின் வளர்ச்சியைச் சரியாக அறிவதற்கு அதை உடல் வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சி, சமூகப் பண்பு வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என நான்கு பகுதிகளாகக் கூறினபோதிலும் அவை அங்ங்னம் தனித்தனியாக வளர்ச்சிபெறவில்லை. குழந்தை எல்லாத்துறைகளிலும் சேர்ந்தே வளர்கின்றது என்பதை நாம் அவசியம் அறிதல் வேண்டும். வளர்ச்சிப் பருவங்கள் குழந்தையின் வளர்ச்சி தொடர்ச்சியாக இருந்தாலும் அதில் சில முக்கியமான பருவங்களை உளநூலறிஞர்கள் பகுத்துப் பேசுவர். அவை வருமாறு : குழவிப் பருவம்" 0.2 அல்லது 3 வயது. முன்பிள்ளைப் பருவம்" 3-6 அல்லது 7 வயது : மனவளர்ச்சிக்குரியது. விலைமாறு பருவம் 6 அல்ல 7-8 வயது . உடல்வளர்ச்சிக்குரியது. பின் பிள்ளைப் பருவம் 8-12 வயது : மனவளர்ச்சிக்குரியது. முன்குமரப் பருவம்: 12-14 வயது உடல்வளர்ச்சிக்குரியது. பின் குமரப் பருவம்' 14-18 வயது : மனவளர்ச்சிக்குரியது சிலசமயம் கிலேமாறு பருவத்தை நடுப் பிள்ளைப் பருவம்' எனவும் குறிப்பிடுவதுண்டு. இங்ங்ணம் குழந்தையின் வளர்ச்சியைப் பல படிகளாகப் பிரித்தாலும் வளர்ச்சி ஆங்காங்கு ஒவ்வொரு படியிலும் முடிவெய்திப் பின்பு புதிதாகத் தொடங்குகின்றது என்று கருதுதல் தவறு: அஃது ஒரே தொடர்ச்சியாகவே போகின்றது. ஒரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் பிற பருவங்களில் காணப்பெரு என்ருே, ஒவ்வொரு பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் முழு வதும் மறைந்தபிறகுதான் அதற்கடுத்த பருவத்திற்குரிய சிறப்பியல்புகள் தோன்றும் என்ருே கருதவேண்டா. மேலும், ஒவ்வொரு பருவத்திற்குரிய 69 (5gs is us[5sus, -infancy. 700psirolârârü u(5sub- early childhood. 71 fi80 udt gy UG5uld - transition period. 72Esir Slér&rú uGsuld - later childhood. 7 &gpār Gudrú u(5also - early adolescence. 74 isor Gibrü 1105sub - later adolescence. 73 issor&rú u(5alo - middle childhood.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/124&oldid=777752" இலிருந்து மீள்விக்கப்பட்டது