பக்கம்:கல்வி உளவியல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 103 குழந்தையின் விருப்பங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் தீவிரமானவை; ஆளுல், விரைவில் மாறக் கூடியவை. தான் உணர்வதையெல்லாம் ஆர்ப்பாட்டங்களுடன் தான் வெளியிடும். எனவே, நாம் அது வெகுள்கின் றதா, பொருமைப்படுகின்றதா, மகிழ்கின்றதா, அன்பு கொள்கின்றதா, அஞ்சுகின்றதா என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஒன்றுமில்லை. இப் பருவத்தில் உண்ணுதல், உறங்குதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் போன்ற உடல் நலத்துடன் தொடர்பு கொண்ட செயல்களில் கற்பழக்கங்களை வளர்க்கவேண்டும். முன்பிள்ளைப் பருவம் (3-6 அல்லது 7) வயது இப் பருவத்திலும் சிறப்பியல்பாகக் காணப்பெறுபவை உடலியக்கமே." சிறு குழவியிடம் தேங்கிக் கிடக்கும் வற்ருத ஆற்றலைக் கண்டு நாம் வியப்படையத்தான் செய்கின்ருேம். விளையாட்டில் தீவிரமான கவர்ச்சி யுண்டாகின்றது; திரும்பத்திரும்ப நடைபெறும் செயல்களைக் கொண்ட விளையாட்டுக்களையே சிறுவன் அதிகமாக காடுகின்ருன். இப் பருவச் சிறுவன் பிறருடைய கூட்டுறவில் விளையாட விரும்பினாலும், அவன் விளையாட்டு தனியாக விளையாடக் கூடியதாகவே உள்ளது. குதித்தல், ஓடுதல், விரட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் இன்பம் தருபவை. உருளை விளையாட்டுப் பொருள்கள்மேல் சிறுவனுக்கு விருப்பம் அதிகம். சிறுவன் தானகவே குளிப்பாட்டிக் கொள்ள விரும்புகின்றன். பல பிள்ளைகளுடன் கூடி விளையாடும் விளையாட்டு இன்பம் தரும். ஆனால், சிறு குழுக்களே அமைகின்றன. சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து விளையாடுகின்றனர். சிறுவர்கள் தம் நண்பர்களுடன் மற்போர் தொடுத்துச் சண்டையிடுகின்றனர்; தம் ஆண்மையை நிலைநாட்ட முயலு கின்றனர். விருந்தினையும் குழுக் கூட்டங்களையும் விரும்புகின்றனர். ஆனல், அங்கு மூத்தோரின் விதிப்படி கடந்து கொள்வதில்லை. ஆசிரி யரின் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும்.அதிக மதிப்புத் தருகின்றனர். கன்னடத்தையும் தீய நடத்தையும் மாறி மாறித் தோன்றுகின்றன. இப் பருவத்தில் குழந்தைகளின் ஆற்றல் வெளிப்படுவதற்கும் கற்பனை செயற்படுவதற்கும் ஏற்ற வாய்ப்புக்களை நல்குதல் வேண்டும். மனவிருப்பம், பாவனை விளையாட்டு, பகற்கனவு, மோகினிக் கதைகள் முதலியவற்றைச் சிறுவர்கள் அதிகமாக விரும்புவார்கள். தந்தை யாகவும், போர் வீரனுகவும், ஆசிரியராகவும், குதிரையாகவும் தன்னைப் பாவித்து விளையாடுவதில் சிறுவன் எல்லையற்ற மகிழ்ச்சி யடைவான் ; கனவுலகில் தன்னல் அடைய முடியாதவற்றையெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/126&oldid=777756" இலிருந்து மீள்விக்கப்பட்டது