பக்கம்:கல்வி உளவியல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கல்வி உளவியல் லாம் கனவுலகில் பெற்று இன்புறுவான். சாதாரணமாகக் காணும் இயக்கங்களையும் ஒலிகளையும் திரும்பத்திரும்ப உண்டாக்குவதில் சிறுவன் அதிக விருப்பத்தைக் காட்டுகின்ருன். இந் நிலையில் பாப்பாபாடல்கள், செவிலிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள் ஆகியவற்றை மிகவும் விரும்பு கின்றன். பண்படையாத இக் களியாட்டப்பாட்டுக்களே பிற்காலத்தில் பண்படைந்து கூத்தாகவும் இசையாகவும், கதைபொதி பாடல்களா கவும், பிற இலக்கியங்களாகவும் முகிழ்க்கின்றன என்று சர். பெர்ஸி கண்" என்ற அறிஞர் கருதுகின்றர். திரும்பச் செய்தலும் சந்த இயக்கமும் ஆழ்ந்ததோர் உணர்வைத் திருப்திப்படுத்துகின்றன. ஆசிரியர் இவற் றைச் சரியாகக் கையாண்டால் அவை முருகுணர் கலையாகவும், நல்ல நடத்தையாகவும், வரையறையுடன் கூடிய பழக்கங்களாகவும் வளரும். இப் பருவத்தில் நீண்ட பாடவேளைகள் கூடா; இருப்புகிலே (posture)யும் இயக்க நிலையும் அடிக்கடி மாறக்கூடிய வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் , இப் பருவத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று விடுப்பூக்கம்?? குழந்தை களிடம் அதிகமாகத் துலங்குவதாகும். என்ன ? எப்படி ? ஏன் ? என்ற விளுக்களால் குழந்தைகள் நம்மைத் துளைத்துவிடும். பெற்றேர்களும் ஆசிரியர்களும் இவ்வூக்கத்தைச் சிதைக்காது தக்கவாறு விடையளித்துச் சமாளிக்கவேண்டும். பெரும்பாலும் இவ் விடுப்பூக்கம் பொருள்களை உடைப்பதில் பங்கு பெறுகின்றது. பொருள்களைச் சிதைத்தல் அவை என்ன என்பதையும் எப்படி செயற்படுகின்றன என்பதையும் கண்டறிதல் பற்றியே நிகழும். அதே சமயத்தில் சிறுவர்கள் பொருள்களைச் சிதைத் தலிலும் மகிழ்ச்சி கொள்ளுகின்றனர் என்பதும் உண்மையே. விளையாட்டுப் பொருளைச் சிதைப்பதால் சிறுவனின் நரம்பு இறுக்கம்?? நீங்குகின் றது என்று கருதலாம். சிறுவன் வளர வளர தசைக்கட்டுப்பாடு அதிகரிக்கின்றது ; குழந்தை பொருள்களைப் படைப்பதிலும் களிப்படைகின்றது. இப் பருவத் தில் களிமண்-வேலை நன்மை பயக்கும்; இதல்ை சிறுவனுக்கு இயக்க வேலைகளில் வாய்ப்புக் கிடைக்கின்றது. சிறுவனுக்கு மனநிறைவு ஏற்படு கின்றது; கற்பனை வளர்கின்றது; முதிர்ந்தோர் செய்யும் வேலையைத் தான் நிறைவேற்றிவிட்டதாகப் பெருமிதம் கொள்ளுகின்றன். பின்பற்றல் இப் பருவத்தில் பெரும்பங்கு கொள்ளும் ; இதல்ை பழக்கங்கள் உண்டாகின் றன ; பின்பற்றும் செயலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடுகின்றது. 763 i Guisůl sair - Sir Percy Nunn# --------------- 7768&dgå&so - instinct of curiosity. 78 swiług pièssh - nervous tension. 79% stuff psi - imitation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/127&oldid=777758" இலிருந்து மீள்விக்கப்பட்டது