பக்கம்:கல்வி உளவியல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 105. எனவே, நாம் சிறுவர்கட்கு நல்ல சமூகச் சூழ்நிலையை அமைத்துத் தருதல் வேண்டும்; குறிப்பாகக் குழந்தை அதிக நேரம் இருக்கக்கூடிய வீட்டில் நல்ல சூழ்நிலை நிலவும்படிச் செய்தல் வேண்டும். உள்ளக் கிளர்ச்சிகளைப் பொறுத்த வரையில், சிறுவன் தன்னைச் சுற்றியே எல்லாச் செயல்களும் நடைபெற வேண்டும் என்றும், தான் செய்வதைப் பிறர் மெச்ச வேண்டும் என்றும் விரும்புகின் ருன். சுருக்கமா கக் கூறினல் சிறுவன் தன் நினைவாகவே இருப்பான். அவன் உணர்ச்சி கள் சிறு காரணத்திற்கும் எளிதாகக் கிளர்ந்தெழும் ; விரைவாகவும் அடங்கிவிடும். சிறுவனிடம் உள்ளப்பகைமையே89 ஏற்படாது ; பிறர் செய்யும் தீங்குகளை விரைவாக மறக்கின்றன் ; மன்னித்தும் விடுகின்ருன். கிலைமாறு பருவம் (6 அல்லது 7-8 வயது உயரத்தில் ஒழுங்கான, மெதுவான வளர்ச்சியுள்ளது. இப்பருவச் சிறுவன் சுயேச்சையாக இருக்கப் பழகுகின்றன், குழந்தைப் பள்ளியை விட்டுத் தொடக்கநிலைப் பள்ளிக்கு வருகின்ருன். எதையும் பெற்ருேரிட மிருந்து எதிர்பார்ப்பதில்லை ; வீட்டையும் அதிகமாக விரும்புகிறதில்லை. பள்ளியில் கட்டுப்பாட்டிற்கு அடங்கி ஒழுங்காக நடந்துகொள்ளுகின்றன். சிறுவனின் மனத்தைப் பள்ளி அதிகமாகக் கவர்கின்றது; பள்ளியிலேயே அதிக நேரத்தைக் கழிக்க விரும்புகின்றன். சிறுவன் பொறுப்பினை ஏற்க விழைகின்ருன் ; சற்றுக் கடினமான வேலைகளையும் செய்யும் ஆற்றலைப் பெறுகின்ருன்; அவனுடைய நடத்தையும் உயர்நிலையை அடைகின்றது. இப் பருவத்தில் சிறுவனுக்குப் பலவித நோய்கள் ஏற்படுகின்றன : நோய்களினல் அதிகம் பாதிக்கப்பெறுகின்ருன்.கழிந்த பருவத்தைவிடவும் இனி வரப்போகும் பருவத்தைவிடவும் களைப்பினுல் அதிகம் தாக்கப்படு கின்ருன். இப் பருவ இறுதியில் மூளையும் முழுவளர்ச்சியுற்று இருக்க வேண்டிய எடையைப் பெறுகின்றது. இன்னும் விளையாட்டில் தனித்தன்மை காணப்பெறுகின்றது ; இன்னும் தன் நினைவு மாறுகிறதில்லை. கற்பனை மிகவும் வீறுடன் விளங்குகின்றது; நாடகக் கற்பனை மனத்தைக் கவர்கின்றது. இப் பொழுது சிறுநாடகத்தைப் படித்து நடிக்கத் தூண்டலாம். உணர்ச்சி கிலைகளுக்கும் கற்பனைக்கும் இது ஏற்ற பருவமாகும். இப் பருவத்தில் சிறுவர்களுக்குக் கூறப்பெறும் கதைகள் நல்ல முடிவுடையனவாக இருத் தல் வேண்டும். aos starủus»zelo - malice. si gæfiğšsirsmuo – individualism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/128&oldid=777761" இலிருந்து மீள்விக்கப்பட்டது