பக்கம்:கல்வி உளவியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi நூல்முகம் கர்கள் விளங்காத பகுதிகளை இந்நூலாசிரியர்க்கு அவ்வப்பொழுது கடிதம் மூலமோ நேரிலோ தெரிவிப்பார்களாயின் அவ்வனுபவத்தைக் கொண்டு அடுத்த பதிப்பில் அப்பகுதிகள் இன்னும் தெளிவாக விளக்கப் பெறும். இப்புத்தகம் பதின்மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பெற் துள்ளது. முதல் அத்தியாயம் கல்வி உளவியலின் இயல்பினையும் அள. வினையும் விளக்குகின்றது. இரண்டாவது அத்தியாயம் மனிதன் சூழ் கிலேயிலுள்ள உயிரி என்றும், அவன் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடடைவதே கல்வி என்றும், பொருத்தப்பாடடைவதற்குத் துணை செய்யும் உறுப்புக்கள் இவை என்றும் எடுத்தியம்புகின்றது. மூன்ருவது அத்தி யாயம் குழந்தை வளர்ச்சியில் காம் காணும் பல்வேறு உடல், உளமாறு பாடுகளைத் தெளிவாக விளக்குகின்றது. நான்காவது அத்தியாயத்தில் குடிவழியின் தன்மைகள், சூழ்கிலேயின் இயல்புகள்,குழந்தை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அது முதிர்ச்சி அடைவதிலுள்ள சிறப்பியல்புகள், கற்றலுக்கும் முதிர்ச்சிக்கும் உள்ள தொடர்பு ஆகியவை போன்ற கருத் துக்கள் கூறப் பெற்றுள்ளன. ஐந்தாவது அத்தியாயம், குழந்தைகளின் ஊக்கு கிலைகள், உள்ளக் கிளர்ச்சிகள், இவை இரண்டற்குமுள்ள உறவு முறைகள் ஆகியவற்றை விளக்கி கிற்கின்றது. ஆருவது அத்தியா யத்தில் கற்றலின் அடிப்படை இயல்புகள், கற்றல் விதிகள், செயல் மூலம் கல்வி பெறுதல், அனுபவத்தால் கல்வியை அடைதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. ஏழாவது அத்தியாயம் கற்றலி லுள்ன கூறுகளனைத்தையும் தொகுத்துக் கூறுவது ; கற்றலுக்கும் கற் பித்தலுக்கும் இது உயிர்காடிபோல் இருப்பது. எனவே, இப்பகுதி சற்று விரிந்து புத்தகத்தின் நடுநாயகமாகவும் அமைந்துளது. எட்டாவது அத்தியாயம் மானுக்கர்களின் அறிதிறன் தன்மைகள், அவற்றின் காரண மாகத் தனியானிடம் காணப்பெறும் வேற்றுமைகள் ஆகியவற்றை விளக்குகின்றது. ஒன்பதாவது அத்தியாயம் மாளுக்கர்களின் உடல்கலத்தைப் பற்றியது. இதில் சிறுவர்களிடம் சாதாரணமாகக் காணப் பெறும் கண், காது, பற்கள் பற்றிய ஊறுகள், ஊட்டத் தேவைகள், களப்பு, சோர்வுபற்றிய செய்திகள் முதலியவை கூறப்பெற்றுள்ளன. பத்தாவது அத்தியாயத்தில் பல்வேறு இயல்புப் பிறழ்ச்சிகள், அவற்றிற் குரிய காரணங்கள், அவற்றைக் களையும் முறைகள் ஆகியவை ஓரளவு விளக்கப்பெற்றுள்ளன. பதினேராவது அத்தியாயம் மாளுக்கர்களின் ஒழுக்க வளர்ச்சியற்றியும், பன்னிரண்டாவது அத்தியாயம் மதிப்பீடும் சோதனையும்பற்றிய நவீன கருத்துக்களையும் கூறுகின்றன. பதின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/13&oldid=777765" இலிருந்து மீள்விக்கப்பட்டது